• முதல்- அமைச்சர் கருணாநிதியும் டாக்டர் ராமதாசும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கி கொடுத்துள்ளது. மேலும் ஒரு மேல்-சபை எம்.பி. தொகுதியும் கொடுக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.
  • திண்டிவனத்தை அடுத்த கோனேரி குப்பத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை தொடக்கவிழாவில் பேசிய கவர்னர்.
  • இளைஞர்களுக்கான பயிற்சிமுகாமில் கலந்துகொண்ட டாக்டர் சின்னைய்யா அவர்கள் பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்களை நீக்க பரிசிலிப்பதாக அறிவித்தார்.
  • சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் அய்யா தற்போதைய சூழலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புவதாக கூறினார்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

மருத்துவர் அய்யா போற்றுதலுக்குரிய பொது அடையாளம் - கவிஞர் ஜெயபாஸ்கரன்

  • ஞாயிறு, 28 நவம்பர், 2010
  • போராளி
  • போற்றுதலுக்குரிய பொது அடையாளம்


    அருமைத் தோழர்களே! அருந்தமிழ்ச் சொந்தங்களே!


    சமூக முன்னேற்றச் சங்கம் சங்கமிக்கும் இவ்விழாவில்.


    உங்கள் அனைவரையும் ஒன்றாகக் காண்பதனால்


    உள்ளம் நிறைகின்றேன்: உணர்வுகளால் சிலிர்க்கின்றேன் - உங்கள்


    ஒவ்வொருவர் முகம் பார்த்தும் உளமார வணங்குகின்றேன்!






    சத்திரியச் சமுத்திரத்தில் சீறியெழும் பேரலைநான்


    பாட்டாளிகளின் படைகளுக்குப் பாட்டிசைக்கும் பாவலன் நான்


    ஏத்தப் பாட்டுக்கெல்லாம் எதிர்ப்பாட்டு பாடிக்கொண்டு


    ஏரிக்கரைகளின் மீது இறுமாந்து நடந்தவன் நான்.






    உழைப்பாளிக் கூட்டத்தில் உதிரியாய்க் கிடந்தவன் நான்


    ஒடுக்கப்பட்டுக் கிடந்து ஓலமிட்டு அழுதவன் நான் - என்


    கருத்தறியா வயதினிலே கால்சட்டைப் போட்டுக்கொண்டு


    காட்டுப்பாக்கம் மண்ணில் கால் தேய நடந்தவன் நான்!


    மருத்துவர் அய்யா எனும் மாபெரும் இடிமுழக்கம்


    மஞ்சள் மேகம்போல் மேடையிலே ஏறுகையில்


    உத்திரமேருரையே உலுக்கி எடுப்பது போல்






    அய்யா அய்யா என்று ஆர்ப்பரிக்கும் கூட்டத்தில்


    யார் அந்த அய்யா? என்று எட்டி எட்டிப் பார்த்தவன் நான்!


    அய்யாவின் கால்பட்ட அத்தனைக் கிராமங்களும்


    ஆர்ப்பரித்து அணிதிரண்ட அதிசயத்தை நான் பார்த்தேன்!


    வெந்ததைத் தின்றுவிட்டு விதிவந்தால் சாவோம் என்ற


    வன்னியச் சமூகத்தை விழிக்கவைத்த வெடிமுழக்கம்!






    உத்திரமேரூர் மண்ணில் உருவான நாள் முதலே


    மருத்துவர் அய்யாவை மனதிலே ஏந்திக் கொண்டேன்! -இன்று


    தமிழினப் போராளியின் போர்ப்படையில் ஒருவன் நான் - உங்கள்


    தமிழ்க்குடிதாங்கியின் தடம் பற்றி நடப்பவன் நான்!


    திருப்புகழைப் பாடினால் வாய் மணக்கும் என்றாலும் - எங்கள்


    தைலாபுரத்தைப் பாடினால்தான் தமிழ் மணக்கும் என்பவன் நான்!






    தமிழினத்தின் துயர்துடைக்கும் காற்றைப் பாடாமல்


    தமிழ் மண்ணை உயிர்ப்பிக்கும் ஆற்றைப் பாடாமல்


    தமிழ்மொழிக்கு நீர்சுரக்கும் ஊற்றைப் பாடாமல்


    தமிழ்ப் பகையைச் சுட்டெரிக்கும் தீயைப் பாடாமல்,


    ஒற்றை வரியிலே உரத்துச் சொல்வதெனில் - எங்கள்


    தைலாபுரத்துத் தந்தை பெரியாரைப் பாடாமல்


    என்பகல் முடிந்ததில்லை: என் இரவு விடிந்ததில்லை!


    எதனால் இப்படி நீ எப்போது பார்த்தாலும்,


    திண்டிவனத்தையே அண்டிக் கிடக்கின்றாய்?


    எல்லோருக்கும் பொதுவான உயர்தமிழ்க் கவிஞர் நீ


    எவரோ ஒரு தலைவரை எப்போதும் புகழலாமா?






    அணி மாறி அரசியலில் ஆதாயம் பார்ப்பவரை,


    கூட்டணி தர்மத்தையே குண்டு வைத்துத் தகர்பவரை


    அணியிலே சேர்ந்த பின்பு அடங்கிப் போகாதவரை,


    அரசியல் வணிகராக ஆகிவிட்ட ஒருவரை,


    அய்யா அய்யா என்று அவர் பினனால் போகிறீரே


    தைலாபுரத்துக்கு அப்பால் தலைவர்களே கிடையாதா?


    திண்டிவனம் இல்லாமல் தமிழ்நாடு விடியாதா?


    என்றெல்லாம் ஒருவர் எனைப் பார்த்துக் கேள்வி கேட்டார்.


    யாரப்பாநீ என்று நான் அவரைக் கேட்டேன்.






    வாணியம்பாடியில் இருந்து வந்திருக்கும் முருகன் நான்


    வாழ்வாங்கு நான் வாழ வகை செய்த கட்சியிலே


    வண்டு முருகனைப் போல் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.


    நீட்டி முழக்கி நான் நுரைபொங்கப் பேசுவதால்


    நுரைமுருகன் என்கிற நல்ல பெயர் எனக்குண்டு!


    என்று சொன்னவரை ஏறிட்டு நான் பார்த்தேன்!


    வாருங்கள் முருகா வாய்கிழிந்த நுரைமுருகா - அரசியலில்


    வாழத் தெரியாமல் வண்டுமுருகன் ஆனவரே


    குதர்க்கமாய் எனைப் பார்த்துக் கேள்விகளா கேட்கின்றாய்?






    தைலாபுரத்துக்கப்பால் தலைவர்களே இல்லையா?


    என்றா எனைப் பார்த்து ஏதோவொரு கேள்வி கேட்டாய்!


    தைலாபுரத்துக்கப்பால் ‘தலைகள்’ இருக்கிறது ‘தலைவர்கள்’ இல்லை


    தமிழ்நாடு முழுவதும் ‘கட்சிகள்’ இருக்கிறது’இயக்கங்கள்’ இல்லை!


    தடிகள் ஒவ்வொன்றிற்கும் ‘கொடிகள்’ இருக்கிறது’கொள்கைகள்’ இல்லை


    பேச வேண்டியதைப் பேசுவோர் இல்லை!


    போராட வேண்டியவை நிறைய இருக்கின்றது


    போராடித் தீர்வுகாணப் போராளிகள் இல்லை? - இப்படி





    இருக்கக் கூடாத யாவும் இருக்கின்ற காரணத்தால்


    இருக்க வேண்டிய எதுவும் இல்லாத காரணத்தால்


    ஈரோட்டுப் பெரியாரின் எண்ணக் குமுறல்களை


    ஈடேற்ற வந்த எங்களது போராளி


    மருத்துவர் அய்யாவே மாபெரும் இனமுழக்கம்!





    அரசியல் கூட்டணியில் அடிக்கடி அணியை மாற்றி - அவர்


    ஆதாயம் காண்பதாக அலறுகின்ற அற்பமே





    அணிமாறும் நிலை எடுக்கும் எங்கள் அய்யா என்றேனும்


    கொள்கை மாரியதாய்க் கூறமுடியுமா உன்னால்?


    மருத்துவர் அய்யாவின் மகத்தான தலைமை ஏற்று


    மாபெரும் மக்கள் கூட்டம் மடைதிறந்து பின் தொடர - அதை


    வழிநடத்திக் கொண்டு சென்று வாழ்வுரிமை பெறுகின்ற


    போராட்ட நெடும்பயனை நுட்பங்களே அணிமாற்றம்.


    நுரைமுருகனுக்கெல்லாம் இந்த நுட்பங்கள் தெரியாது!




    ஆற்று மணலையெல்லாம் அள்ளிக் கொண்டு போங்கள் என்று


    அணி மாறிய எங்கள் அய்யா அறிக்கைகள் விட்டாரா?


    கல்விக்கட்டணத்தில் இனிமேல் கொள்ளையடிக்கலாம் என்று


    கூட்டணி மாறியதால் கூட்டத்தில் பேசினாரா?





    இடஒதுக்கீடு உரிமை எங்களுக்கு வேண்டாம் என்று


    எந்தக் கூட்டணியில் சேர்ந்து எங்கள் அய்யா உனக்கு சொன்னார்.


    வாழமுடியாமல் சாகும் வேளான்குடி மக்களின்


    வாழ்வுரிமைகளுக்கு இனிமேல் வாய்திறக்க மாட்டேன் என்று


    அணிமாறிய எங்கள் அய்யா அறிவிப்பு செய்தாரா?





    ஏழை உழவர்களுக்கு இருக்கின்ற விளைநிலத்தை


    வளைத்து வளைத்து இனிமேல் வாங்கிப் போடுங்கள் என்று


    நீ செய்யும் இரண்டகத்தை எங்கள் அய்யா செய்கின்றாரா?


    அணிமாறிய உடனே ஆட்களை கூட்டிக் கொண்டு


    வீட்டையெல்லாம் இடித்து விமானத்தை இறக்குவதற்கு


    புல்டோசரை ஓட்டிக்கொண்டு போனாரா எங்கள் அய்யா?


    குடிமக்களே தமிழ்க் குடிமக்களே நீங்கள்


    குடித்துக் குடித்துக் குட்டி சுவராய் போங்களென்று


    கூட்டணிக் கட்சியின் கொள்கையைக் கூறினாரா எங்கள் அய்யா?





    ஆளும் கூட்டணியில் அணிசேர்ந்த காரணத்தால்


    அரசே.... அரசே ஆளுகின்ற தமிழரசே


    சாராய உற்பத்தி சுணங்கிப் போய்க் கிடக்கிறது


    ஆலைகளை திறந்து அழகழகா மது வடித்து


    அனைவருக்கும் கொடு என்று ஆர்ப்பாட்டம் செய்தாரா?





    முதல்வர் குடும்பத்தின் முத்தான காவியம்


    எந்திரன் வெளிவந்து இத்தனை நாள் ஆகிறதே


    இளைஞர்களே நீங்கள் அதை இன்னுமா பார்க்கவில்லை?


    என்று எங்களையெல்லாம் இருட்டிலே தள்ளினாரா?





    அணிமாறிப் போய்விட்ட அவசியத்தின் பொருட்டு


    ஆற்காட்ட்சு சாமிகள் ஆனந்தப்படும் படியாய்


    தமிழ் ஓசை நாளேட்டைத் தெலுங்கிலே நடத்தினாரா?





    அணிமாறி விட்டதனால் அறம் மாறிச் செயல்பட்டு


    மக்கள் தொலைக்காட்சியிலே மானாட விட்டாரா?


    மயிலாடப் பார்த்தாரா? - இல்லை


    குதர்க்கப் பொருள் கொண்ட குத்துப் பாட்டுக்கெல்லாம்


    குழந்தைகளைக் கூட கூத்தாட விட்டாரா?





    உன்னோடு கூட்டணியில் ஒன்றாய் இருந்த போதே


    ஊருக்கு உலைவைக்கும் உங்களதுத் திட்டங்களை


    உடனுகுடன் தகர்த்த வீரியம் எங்கள் அய்யா!





    தேவையைக் கருதிச் சேரும் தேர்தல் உடன்பாட்டில்


    அடங்கிப் போவார் என்று அய்யாவை நினைக்காதே!


    அடக்கப் பிறந்த அவர் அடங்கிப் போக மாட்டார்!





    கட்சி அரசியல் கலாச்சாரக் கூட்டத்தில்


    கொள்கை அரசியலின் கோட்பாடு எங்கள் அய்யா!





    கோடானுகோடுப் பாட்டாளிச் சொந்தங்களின்


    நாடி நரம்புகளில் நீக்கமற நிறைத்து நின்று


    சமூகநீதி கேட்ட்கும் சஞ்சீவிராயர் மகன்!





    ஒரே ஒரு மனிதராய்ப் பயணத்தைத் தொடங்கி


    இரண்டு கோடித் தமிழர்களின் இயக்கமாய் மாறியவர்!


    அரசியலுக்கு அப்பால் அனைத்துத் தமிழர்களுக்கும்


    பெரியாருக்குப் பிறகுவந்த பெரியார் இவர் என்கிறார்கள்!




    அய்யா என்கின்ற மையப்புள்ளியே- நம்


    அனைவருக்குமான அடையாளமானது!


    இரண்டு கோடி மக்கள் இருக்கின்ற சொந்தத்தில்


    அய்யாவுக்கு முன்பென்ற அடையாளம் எவருமில்லை!


    போற்றுதலுக்குரிய பொது அடையாளம்


    இனமிருக்கும் வரைக்கு இருக்கப் போகும் அடையாளம்!





    அய்யா சிந்திய வியர்வைத் துளிகளே


    ஆயிரக்கணக்கிலே சங்கமாய்த் திரண்டது!


    அய்யா என்கிற ஒற்றை நரம்புதான்


    உதிரிமணிகளை ஒன்றாக கோத்தது!.





    ஆசுவாசப் படுத்தியே அழிக்கின்ற அரசியலில் - நம்மை


    ஆவேசம் பெற செய்த அருமைப் பெருந்தலைவர்!


    அனைத்துச் சமூகங்களும் அதனதன் உரிமைப் பெற


    அடித்தளமாய்ச் சிந்திக்கும் அரசியல் விஞ்ஞானி!





    ஓட்டுக்கு துட்டு தரும் உங்களது அரசியலில்


    வேட்டுக்கு உயிர்கொடுத்து வரலாற்றைத் தொடங்கியவர்!


    பட்டாசு ஓசைக்குப் பழக்கப்பட்ட தலைவர்களைத்


    துப்பாக்கி ஓசையால் திரும்பிப் பார்க்க வைத்தார்!





    இரண்டகம் ஏளனம் எல்லாம்


    எங்களைக் கடந்து போகும்!


    எல்லாமும் இழந்து நிற்கும் எங்களது ஏழையினம்


    யாவும் பெறுகின்ற இனியநாள் நாளை வரும்!


    நாளை நமதாகும் நல்லதோர் விடியல் வரும் - எங்கள்


    நவநீதம்மாள் பேரன் நாடாளும் காலம் வரும்!



    அன்புடன்,
    கவிஞர் ஜெயபாஸ்கரன்














     (குறிப்பு : -10-10- 2010  அன்று சென்னை பாடியில் நடைபெற்ற சமுக முன்னேற்ற சங்க விழாவில் கவிஞர் ஜெயபாஸ்கரன் வாசித்த கவிதை)





    வெள்ளி, 26 நவம்பர், 2010

    பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை - பாமகவினருக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

  • வெள்ளி, 26 நவம்பர், 2010
  • போராளி
  • 
    டாக்டர் அன்புமணி ராமதாஸ்
    
    பாமகவில் பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் எச்சரித்தார். வேலூர் ஒருங்கிணைந்த கிழக்கு மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டம் ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இதில், பாமக மாநில இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் பேசியது: அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாடுபடும் கட்சி பாமக. பொதுத் தேர்தல் வர உள்ள நிலையில், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உயர்ந்த பொறுப்புகள் வழங்கப்படும். கட்சிக்காக அன்று உழைத்தவர்கள் இன்று அமைதியாக கிராமங்களில் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களை அழைத்து தலைமை வகிக்கச் செய்து நிகழ்ச்சிகளை நடத்துங்கள். பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    பென்னாகரம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் நாம் தோற்கடிக்கப்பட்டோம். இது ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்ட தேர்தல். நாம் பணம் தராமல் இரண்டாவது இடம் பெற்றோம். இனி பென்னாகரம் தேர்தல் பார்முலாவை பயன்படுத்த உள்ளோம். விஞ்ஞான ரீதியில் அரசியல் நடத்த உள்ளோம். இளைஞர்களை ஊக்குவிக்க உள்ளோம்.

    வாலாஜா ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று சென்றதால் ரயில்வே துறைக்கு ரூ.5 கோடி வரை லாபம் கிடைத்தது. தற்போது எந்த ரயிலும் நிற்பதில்லையாம். இதுகுறித்து 4 முறை மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். தன்னால் முடியாது என்று அமைச்சர் சொல்லட்டும். நான் நிறுத்திக் காட்டுக்கிறேன்.

    பாமக 7 இடங்களில் தோற்றதும் அழிந்து விட்டது, ஒழிந்து விட்டது என்று பலர் கூறினர். பாமகவை யாராலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது. பாமக இல்லாமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள இடஒதுக்கீடு போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால் தலைவர் ராமதாஸ் ஒப்புதலோடு சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    கூட்டணி பற்றி யாரும் கவலைகொள்ளத் தேவையில்லை. தலைவர் ராமதாஸ் பார்த்துக் கொள்வார். பாமக இல்லாமல் ஆட்சிக்கு யாரும் வரமுடியாது என்பதை உணர்த்த வேண்டும் என்றார் அவர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு: பாமக புத்துணர்வு பெற்று செயல்பட்டு வருகிறது. எதிர்கட்சிகளை எதிர்கொள்ளத் தயாராகி உள்ளது. 52 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக பாமக விளங்குகிறது. இளைஞர் பட்டாளம் அதிகம் உள்ள ஒரே கட்சி பாமகதான் என்றார் அவர்.

    பாமக தலைவர் கோ.க.மணி: நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் பாமகதான் வெற்றி பெறும். தமிழகத்தில் சுகாதாரத்துறை தன்னிறைவு பெற பாடுபட்டவர் அன்புமணி. தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சி அமையும். சட்டப் பேரவைத் தேர்தல் வர உள்ளது. அதற்குள்ளாக கிராமக் கிளைகளை வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

    கூட்டத்துக்கு ஆர்க்காடு எம்.எல்.ஏ. கே.எஸ்.இளவழகன் தலைமை வகித்தார். இதேபோல, திருப்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜி.பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வியாழன், 25 நவம்பர், 2010

    எதிர்ப்போரின் கவனத்திற்கு - ஜெ.குரு. தலைவர் வன்னியர் சங்கம்

  • வியாழன், 25 நவம்பர், 2010
  • போராளி


  • வன்னிய சிற்றரசர்கள் - நூல் வெளியீட்டு விழா

  • போராளி
  • 
    
    
    
    புலவர் முத்து எத்திராசன் அவர்களின் வன்னிய சிற்றரசர்கள் என்ற நூலை மருத்துவர் சின்ன அய்யா வெளியிட்டார்கள்
       

    சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு - முப்பெரும் விழா - சென்னை பாடி திருமால் திருமண மண்டபம்

  • போராளி
  • 
    சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு மற்றும் முப்பெரும் விழா 10-10-2010 அன்று சென்னை பாடி திருமால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு நம் சமுதாயத்தை சார்ந்த பல் துறை அறிஞர்கள், வல்லுநர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த அறிஞர்களுக்கு பாராட்டும் விருதும் மருத்துவர் அய்யா அவர்கள் வழங்கினார். அருகில் ச.மு.ச. தலைவர் திரு.கே. கோபால் தலைமை வகித்தார்.
    

    கூட்டணி பற்றி ஜனவரி மாதம் முடிவு; டாக்டர் ராமதாஸ் பேட்டி

  • போராளி

  • திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உழவர் வாழ்வுரிமை மாநாடு நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. அந்த குழுவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரே தலைவராக இருப்பார். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அதிக அளவில் உறுப்பினர்களாக நியமிக்கப்படவும் வழி இருக்கிறது. எனவே பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுவது பயன்தராது.

    இப்போதைக்கு நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. வரும் தேர்தலில் பா.ம.க. எந்த கட்சியுடன் கூட்டணி சேர்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. வரும் ஜனவரி மாதத்தில் கூட்டணி பற்றிய முடிவை அறிவிப்போம்.

    இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

    எங்களை நம்பவைத்து கருணாநிதி கழுத்தறுத்துவிட்டார் - டாக்டர் ராமதாஸ்

  • போராளி


  • "வன்னியர்-அந்நியர் எனப் பிரித்துப் பேசி மீண்டும் சாதி ஆயுதத்தைக் கையில் எடுத்துவிட்டீர்களே?"
    "இது தவறான குற்றச்சாட்டு! வன்னியர் சங்கத்தைத் தொடங்கியபோதே, இரண்டு முக்கியமான குறிக்கோள்களை நாங்கள் வைத்தோம். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மற்ற சமுதாயத்தினருக்கும் அவர்களது மக்கள் தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பது முதலாவது கோரிக்கை. ஆதிதிராவிட சமுதாயத் துக்கு இப்போது 18 சதவிகித இட ஒதுக்கீடு தரப்படுகிறது. அதை 22 சதவிகிதமாக மாற்ற வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை. 1980 முதல் 89 வரை சுமார் ஒன்பது ஆண்டு காலம் நாங்கள் நடத்திய அனைத்து மாநாடுகளிலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மை சமூகங்கள் கலந்துகொண்டன. அருந்ததியினருக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு முந்தைய எங்கள் தீர்மானத்தைத்தான் கலைஞர் இன்று நிறைவேற்றி இருக் கிறார். அதேபோல், முஸ்லிம், கிறிஸ்துவர் தனி ஒதுக்கீடு வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கைதான்.

    இப்படி, ஒடுக்கப்பட்ட இனங்களின் குரலாகத்தான் பாட்டாளி மக்கள் கட்சி இயங்கி வருகிறது. நாங்கள் பேசுவது குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்தவும் வளப்படுத்தவும்தானே தவிர, மற்ற சமூகங்களை எதிர்த்து அல்ல!"

    "20 ஆண்டுகளுக்கு முன்னால் வன்னியர்களுக்கு முதல்வர் கருணாநிதி இட ஒதுக்கீடு செய்துகொடுத்தார். அது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லையா? இன்னும் ஒதுக்கீடு வேண்டும் என்கிறீர்களே?"

    "சிலருக்குக் கல்வி கிடைத்தது. சிலருக்கு வேலை கிடைத்தது. சிலர் பொருளாதாரத்தில் முன்னேறினார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக வன்னியர் சமூகத்தின் வாழ்க்கைத் தரமே உயர்ந்துவிட்டது என்று சொல்ல முடியாது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று ஆக்கி 20 சதவிகிதத்தை வழங்கிய முதல்வர் கலைஞர், அதை வன்னியருக்கு மட்டும் தரவில்லை. ஒட்டுமொத்தமாக, 109 சாதிகளுக்குத்தான் அந்த 20 சதவிகிதம் தரப்பட்டுள்ளது. இன்றைக்குப் பல சாதிகள், 'எங்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கின்றன. இந்நாட்டின் பெரும்பான்மை சமூகமான வன்னியர்களுக்கு, அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கீடு இல்லை என்பது எங்களது வருத்தம்.

    அண்டை மாநிலங்களில் சாதி இடஒதுக்கீட்டை 'கம்பார்ட்மென்ட் சிஸ்டம்' எனத் தொகுப்புகளாக வைத்து இருக்கிறார்கள். ஆறு, ஏழு தொகுப்புகள் உண்டு. அப்படிப் பிரிக்கவே நான் சொன்னேன். ஆனால், வன்னியர் களோடு 109 சாதிகளைத் திட்டமிட்டு கலைஞர் சேர்த்தார். இது சமூக நீதி அல்ல. பெரியாரின் கை பிடித்து வளர்ந்ததாகச் சொல்லும் கலைஞர் இதை உணர வேண்டும்!"

    "தேர்தலுக்குத் தயாராகிவிட்டதா பா.ம.க?"
    "நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். தேர்தல் களத்தைப் பார்த்து பா.ம.க பயந்ததே இல்லை!"

    "காங்கிரஸ் - விஜயகாந்த் - பா.ம.க. மூன்றும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்களே?"

    "அப்படித்தான் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. ஆனால், இதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சிதான் எடுக்க வேண்டும்."

    "அப்படி முயற்சி எடுக்கப்பட்டால், விஜயகாந்த்துடன் இணைய மனரீதியாக நீங்கள் தயாராகிவிட்டீர்களா?"


    "அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை!"


    "தி.மு.க, அ.தி.மு.க. அல்லாத காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று நீங்கள் சொல்லிவருவது இதை மனதில் வைத்துத்தானா?"

    "காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்பது என் அபிப்பிராயம் அல்ல. சில மூத்த காங்கிரஸ் காரர்களின் கருத்தே அதுதான். என்னிடம் நேரிலும் தொலை பேசியிலும் பேசும் காங்கிரஸ் சீனியர்கள், '40 ஆண்டு காலமாக தி.மு.க, அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளின் தோள்களிலும் மாறி மாறி ஏறி தேர்தல் திருவிழாவைப் பார்க்கிறோம். பக்கத்து மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் கட்சியாக இருக்கிறது. ஆனால், இங்கு மட்டும் முடியவில்லையே' என்று வருத்தப்படுகிறார்கள். திராவிடக் கட்சிகளுக்கு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். விரும்பியதை என்னிடம் சொல்கிறார்கள். அதை மக்களுக்கு நான் சொன்னேன்."

    "தி.மு.க - அ.தி.மு.க. அல்லாத ஆட்சிக்கு சாத்தியம் இருக்கிறதா?"

    "காங்கிரஸ் முயற்சி எடுத்தால் இந்த நிலை மாறுவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது!"

    "கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு அணிகளிலும் இருந்துவிட்டீர்கள். கசப்பான அனுபவம் உங்களுக்கு அதிகமாக உண்டு. இரண்டு அணிகளுமே வேண்டாம் என்று முடிவெடுக்க முடியுமா?"

    "இவர்கள் இருவருமே வேண்டாம் என்று தனியாக நிற்கக்கூடிய சூழல் வந்தால், அதற்கும் பா.ம.க. தயார். எங்கள் கட்சிக்கு செல்வாக்கான 100 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து, இப்போதே தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டோம். நாங்கள் அதையும் எதிர்கொள்ளத் தயார்!"


    "கருணாநிதி மீதான கோபம் உங்களுக்குக் குறைந்து இருக்கிறதா?"

    "எங்களை நம்பவைத்து கருணாநிதி கழுத்தறுத்துவிட்டார். அன்புமணிக்கு ராஜ்ய சபா ஸீட் தருகிறேன் என்று சொல்லிச் சொல்லியே ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. இன்றைக்கு 96 எம்.எல்.ஏ-க்கள் தி.மு.க-வுக்கு இருக்கிறார்கள் என்றால், அதில் 40 தொகுதிகளை பா.ம.க. தயவு இல்லாமல் கருணாநிதி ஜெயித்திருக்க முடியுமா? கருணாநிதி முதல்வராக ஆகியிருக்க முடியுமா? இன்றைக்கு சிவப்பு விளக்கைச் சுழலவிட்டு அதிகாரம் பண்ணும் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகிய ஆறு பேரும் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற யார் காரணம்? பா.ம.க-வின் வாக்குகள் இல்லாமல் இவர்களால் ஜெயித்திருக்க முடியுமா?

    9 எம்.எல்.ஏ-க்கள் வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா ஸீட், 6 எம்.எல்.ஏ-க்கள் வைத்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா ஸீட் தரும் முதல்வர் கலைஞர், 17 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் பா.ம.க-வுக்கு ஏன் தர மறுக்கிறார்? எங்களின் 17 பேர் ஓட்டு போட மறுத்திருந்தால், அவரால் மேல்சபையைக் கொண்டுவந்திருக்க முடியுமா? நான் செய்த ஒரே தப்பு, மேல் சபைக்கு 17 பேர் ஓட்டு போடச் சொன்னபோது, 'அன்புமணிக்கு ராஜ்யசபா ஸீட்' என்று கலைஞரிடம் எழுதி வாங்கியிருக்க வேண்டும். கலைஞரின் ஏமாற்று வேலையை உணராமல் போய்விட்டேன்.

    எப்போது நாங்கள் பேசினாலும், தருகிறேன், தருகிறேன் என்பதைத் தவிர மறு பேச்சு பேசவில்லை கலைஞர். ஒருமுறை கோ.க.மணியிடம், 'நான்தான் தர்றேன்னு சொல்லிட்டேன்ல... அப்புறம் ஏன் அதையே பேசுறீங்க!' என்று கலைஞர் சொன்னார். உடனேயே கலைஞருக்கு போன் செய்து, நான் நன்றி சொன்னேன். இப்படிக் கழுத்தறுப்பார் என்று நினைக்கவில்லை. ஆனால், அவர் செய்தது வரலாற்றுப் பிழை என்பதை வரும் காலத்தில் உணர்வார்!"

    "அன்புமணிக்கு ஸீட் தராமல் விட்டதற்கு வேறு ஏதாவது உள்நோக்கம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?"

    "ஆரம்பத்தில் அப்படி நான் நினைக்கவில்லை. ஆனால், எங்கள் எம்.எல்.ஏ-க்கள் கலைஞரைச் சந்தித்தபோது, 'அன்புமணிக்கு எதற்காகக் கேட்கிறீர்கள்?' என்று ஸ்டாலின் கேட்டு இருக்கிறார். அதாவது, அன்புமணி டெல்லிக்குப் போகக் கூடாது என்பதே அவர்களது நோக்கம்!"

    "பா.ம.க-வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று அந்தக் கட்சியின் உள்ளேயே பலமான லாபி இருக்கிறதே?"



    "இரண்டே இரண்டு அமைச்சர்கள்தான் இந்த வேலையைப் பார்க்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் பா.ம.க-வைச் சேர்க்க வேண்டும், பா.ம.க. இருந்தால்தான் நாம் ஜெயிக்க முடியும் என்று சொல்லிவருவதும் எனக்குத் தெரியும்."
    "உங்களுக்கு எங்கு எல்லாம் செல்வாக்கு இருக்கிறதோ, அந்தத் தொகுதிகளை எல்லாம் நீங்கள் வாங்கிக்கொள்கிறீர்கள். அதனால் கூட்டணிக்கு என்ன பயன் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறதே?"

    "எங்கள் கட்சிக்கு 75 தொகுதிகளுக்கு மேல் வலுவான வாக்கு வாங்கி உள்ளது. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் 27 இடங்களும் தி.மு.க. கூட்டணியில் 31 இடங்களும்தான் தரப்பட்டன. செல்வாக்கு உள்ள அத்தனை தொகுதிகளையும் தந்துவிடவில்லை. அப்படியானால், மற்ற இடங்களில் அவர்கள்தானே வெற்றி பெறுகிறார்கள். எனவே, இது தவறான வாதம்!"

    "உங்களது சமீப காலப் பேச்சுக்களில் கருணாநிதி மட்டுமே தாக்கப்படுகிறார். ஜெயலலிதா, விஜயகாந்த்தைத் தவிர்க்கிறீர்களே?"

    "ஆளும் நாற்காலியில் யார் உட்கார்ந்திருக்கிறார்களோ, அவர்களைத்தானே விமர்சிக்க முடியும். என்றைக்கும் பொறுப்பான எதிர்க் கட்சியாக பா.ம.க செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் எங்கள் அளவுக்கு சட்டசபையிலும், வெளியிலும் தி.மு.ககூட ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. இன்று சூராதி சூரர்களைப்போலப் பேசுபவர்கள் அன்று பேச நடுங்கிப் பயந்தார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஆளும் அணியில் இருந்தாலும் நடுநிலை விமர்சனங்களை நாங்கள் விடவில்லை. அதனாலேயே கூட்டணியைவிட்டுத் துரத்தப்பட்டோம். எனவே, ஆளும் கட்சியை விட்டுவிட்டு எதிர்க் கட்சிகளை விமர்சிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அரசியல் அபத்தம்!" - கோபமாக முடிக்கிறார் ராமதாஸ்!

    புதன், 24 நவம்பர், 2010

    மகிழ்ச்சி - பாசத்திற்காக தன்னையே விதைக்கும் தம்பியின் பாசப் போராட்டம்

  • புதன், 24 நவம்பர், 2010
  • போராளி

  • படத்தின் ஒளிப்பதிவிற்காகவும், படம் இலக்கியம் சார்ந்த நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதற்காவும், மிக அழகாக இயக்கப்பட்டிருப்பதற்காகவாவது இப்படத்தை நாம் கண்டிப்பாக பார்க்கவேண்டும்.   


    தங்கர்பச்சான்



    படத்தின் கதாநாயகன் இயக்குநர் வ.கௌதமன்தான் . கார்த்திகாதான் அக்கா. திருமண வயதிலிருக்கும் இவரை அசலூரில் திருமணம் செய்து கொடுத்தால் புகுந்த இடம் எப்படியிருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளூரிலேயே மணம் முடிக்கிறார்கள். ஆனால் உள்ளூர் மாப்பிள்ளையான சம்பத், கொடுங்கோல் கணவனாக கார்த்திகாவை வதைக்கிறான். மலடி என்று முத்திரை குத்துகிறான். வாழா வெட்டியாக வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள் அவள். இன்னொரு பக்கம் அஞ்சலியுடன் காதல் கொண்டிருக்கும் கௌதமன், தனது கல்யாணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டில் அக்கா இருக்கும்போது எனக்கு எதற்கு திருமணம் என்று கேட்பதால் அஞ்சலியையும் வலுக்கட்டாயமாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள். அக்கா மலடியில்லை என்பதை மருத்துவ சான்றிதழுடன் நிரூபிக்கும் தம்பி, அவளை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நண்பனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.

    இந்த முடிவுக்கு கௌதமனின் குடும்பத்தார் ஒரு புறம் எதிர்ப்பு தெரிவிக்க, இந்த திருமணம் நடந்தால் தனது குறை ஊருக்கு தெரிய வரும் என்று சம்பத் மறுபுறம் திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டம் தீட்டுகிறார். இவர்களின் புரட்சிகரமான இந்த திருமணம் எதிர்ப்புகளை மீறி எப்படி நடக்கப்போகிறது என்பதுதான் இறுதிக்காட்சி

    நடிகர்கள்

    வ.கௌதமன்,
    இயக்குனர் - வ.கௌதமன்
    அஞ்சலி,
    பிரகாஷ்ராஜ்,
    ‘நம்நாடு’ கார்த்திகா,
    சீமான்,
    கஞ்சா கருப்பு,
    வி.எஸ்.ராகவன்,
    சம்பத்
    கிருஷ்ணமூர்த்தி,
    சுகுமாரி


    இசை
    வித்யாசாகர்

    இயக்கம்
    வ.கௌதமன்

    தயாரிப்பு
    த.மணிவண்ணன்


    சாதிவாரி கணக்கெடுப்பு அரசின் நிலை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது - மருத்துவர் அய்யா

  • போராளி
  • மருத்துவர் அய்யா
    சென்னை: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வரைச் சந்தித்த அனைத்து சமுதாயத் தலைவர்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    அவர் விடுத்துள்ள அறி்க்கையில், எழுத்தறிவு, கல்வித் தகுதி உள்ளிட்ட சமூகப் பொருளாதார விவரங்களை ஒருங்கிணைத்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஓராண்டு காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டு, நான்கு மாதங்கள் முடிந்து விட்டன.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றி முடிக்கவேண்டும் என்று முதலமைச்சரிடம் நானும், நாற்பதுக்கும் மேற்பட்ட சமுதாயச் சங்கத் தலைவர்களும்முறையீடு செய்து ஒன்றரை மாதம் முடிவடைந்து விட்டது.
    மாநில பிற்படுத்தப்பட்டோர் நலஆணையத்தின் தலைவருடனும், சம்பந்தப்பட்ட அரசுத்துறை செயலாளர்களுடனும் இதுதொடர்பாக முதல்வர் ஆலோசனை கலந்துள்ளார்.

    இந்த ஆலோசனை நடைபெற்று ஒரு மாதமாகிறது. ஆனால் நம்பிக்கையுடன் எதிர்பார்த்தப்படி, மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணை இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.

    முதல்வரைச் சந்தித்த அனைத்து சமுதாயத் தலைவர்களுக்கும் இது ஏமாற்றம் அளித்துள்ளது.
    மாநிலத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்த நம்பகமானஆதாரங்கள் திரட்டப்பட வேண்டும்; அப்படி திரட்டப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வளங்களும், வாய்ப்புகளும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.இதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    இந்தக் கோரிக்கையை மாநிலத்தில் உள்ள அனைத்து சமுதாயங்களும் ஏற்றுக் கொள்கின்றன. இதனை எதிர்ப்பார் யாரும் இல்லை. முதலமைச்சருக்கும் இதில் உடன்பாடு இருக்கிறது.இருந்தாலும், அதற்கான ஆணையைப் பிறப்பிப்பதற்கு எது தடையாக இருக்கிறது என்பது புரியவில்லை.

    2011ம் ஆண்டின் மாதத்தில் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறது. இந் நிலையில் மாநில அரசு தனியாக ஏன் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்? என்று கருதலாம்.

    ஆனால் நமது மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் கணக்கெடுப்பிற்கும், மத்திய அரசு நடத்தப் போகும் கணக்கெடுப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

    மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் கணக்கெடுப்பிற்குப் பிறகு நமக்கு கிடைப்பதெல்லாம், சாதிகளின் தலைக் கணக்கு மட்டும்தான். ஆனால் மாநிலத்தில் இடஒதுக்கீடு சலுகைப் பெறும் வகுப்பினரை அளவிடக்கூடிய அனைத்து புள்ளி விவரங்களும் அடங்கிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளையாகும்.

    இந்த இரண்டிற்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறது.

    உச்ச நீதிமன்றத்தின் கட்டளைப்படி அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் அவர்கள் திருப்தியடைகிற புள்ளிவிவரங்களோடு கூடிய கணக்கை மாநில அரசு அளிக்கத் தவறினால் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடும் நிலைமை நமக்கு இருக்கிறது. மத்திய அரசுக்கு இந்த நிர்பந்தம் இல்லை.

    பல்வேறு கல்வியாளர்கள், அறிஞர்கள் சுட்டிக்காட்டியபடி மத்திய அரசின் கணக்கெடுப்பு நிறைவு பெறாமல் பாதியிலேயே நின்று விடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதை நம்பிய காரணத்தினால் தமிழக அரசும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.

    இதுதான் தருணம் என்று எண்ணி, இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் நமது இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு வேட்டு வைத்து விடுவார்கள்.

    கடந்த காலங்களில் வேறு சில பிரச்சனைகளில் காலம் தாழ்த்தியதன் விளைவாக தமிழகம் பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிக்கிறது.

    இதற்கு யார் காரணம் என்று ஒருபுறத்தில் அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது. அதுபோன்ற ஒருநிலை இடஒதுக்கீட்டு சட்டத்திற்கும் வந்துவிடக் கூடாது.

    எனவே தாமதமின்றி தமிழகத்தில் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி, புதிய சட்டம் இயற்ற வழிவகுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

    பாமக தொழிற்சங்கத்தை ஆதரிக்க கோரிக்கை:

    அவர் விடுத்துள்ள இன்னொரு அறிக்கையில், தமிழகத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் அங்கீகரிப்பட்ட பாட்டாளி தொழிற்சங்கம் குறுகிய காலத்தில் நிர்வாகத்துடன் போராடி பல கோரிக்கைகளை நிறைவேற்றி சாதனை புரிந்துள்ளது.

    போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணப் பயன் ஓய்வு பெறும் நாள் அன்றே வழங்கப்பட வேண்டும். 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகளை பெற்றுத்தர பாட்டாளி தொழிற்சங்கம் வாக்குறுதி அளிக்கிறது.

    எனவே போக்குவரத்து தொழிலாளர்களுக்காக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க தகுதிப் படைத்த தொழிற்சங்கத்தை தேர்வு செய்யும் தேர்தலில் பாட்டாளி தொழிற்சங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

    செவ்வாய், 23 நவம்பர், 2010

    கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய "மனைவியானேன் மகளே' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

  • செவ்வாய், 23 நவம்பர், 2010
  • போராளி
  • மனைவியானேன் மகளே வெளியீட்டு விழா அழைப்பிதழ்
      
    
    முன்பக்கம்
    
    பின் பக்கம்
    
    





















    கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய "மனைவியானேன் மகளே' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நவ. 20 ,2010 அன்று நடைபெற்றது. நூலை வெளியிட்டு முன்னாள் நடுவண் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

    இந்த கவிதை நூலைப் படித்துப் பார்த்தேன். கவிதை பற்றி தெரியாத எனக்கே அற்புதமாகப் புரிந்தது. கருத்துகளை வார்த்தை ஜாலமின்றி நேரடியாகவும் எளிமையாகவும் சொல்லியிருக்கிறார். சமகாலத்தில் நிலவும் சமூகப் பிரச்னைகளைச் சுட்டிக் காட்டி அதற்கு தீர்வும் சொல்லியிருக்கிறார்.

    
    
    
    
    விழாவில் கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய "மனைவியானேன் மகளே' கவிதை நூலை மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வெளியிட அதைப் பெறுகிறார் ஜெகமதி கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சின்னமருது தீனதயாளன் பாண்டியன்
       
    
    
    
    டாக்டர் சின்ன அய்யா அவர்களுடன் கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள்
      
    அவருடைய எழுத்தில் சமுதாயச் சீர்கேடுகளைக் களையும் கோபம் இருக்கிறது. மக்கள் நலன் மீது அக்கறை இருக்கிறது. இவர் போன்று மக்களின் நலனுக்காகச் சிந்திப்பவர்கள் அதைச் செயலாக்க பொதுவாழ்வுக்கு வந்து போராட வேண்டும்.

    தமிழகம் பசுமையாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். புகையிலையும், ஒருசொட்டு சாராயம் கூட இல்லாத நிலை உருவாக வேண்டும். அதற்கு இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய இளைஞர்கள் நடிகர்களுக்காக கட் அவுட் வைப்பது, பாலபிஷேகம், பீர் அபிஷேகம், கையில் சூடம் ஏத்துவது, மண் சோறு சாப்பிடுவது என திசைமாறிக்கொண்டிருக்கிறார்கள். படம் ஓடினால் நடிகர் பணத்தை வாங்கிக்கொண்டு போய்விடுவார். இவர்களுக்கு என்ன கிடைக்கும்.

    நான் சினிமாவுக்கு எதிரானவன் அல்ல. சினிமா ஒரு பொழுதுபோக்கு. அது நிஜம் அல்ல. ஆனால் அதில் வரும் காட்சிகளைப் பார்த்துவிட்டு பலரும் உண்மை என நம்பி ஏமாறுகிறார்கள் என்றார்.
    
    கவிஞர் ஜெயபாஸ்கரன்
    
    விழாவில் மாநில கல்லூரியின் பேராசிரியர் அந்தோனி டேவிட் நாதன், கவிதை நூலைத் திறனாய்வு செய்தார். அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் கு.புகழேந்தி, கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், மதுரா டிராவல்ஸ் இயக்குநர் வி.கே.டி.பாலன், திரைப்பட இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோர் நூலைப் பற்றிய கருத்துரை வழங்கினர்.

    ஜெகமதி கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சின்னமருது தீனதயாளன் பாண்டியன், கவிஞர்கள் முகமது சபி, ஜான் தன்ராஜ், சித்தன் ஜெயமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கவிஞர் ஜெயபாஸ்கரன் நன்றி கூறினார்.

    
    கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய கடைசிப்புகையின் கல்லறை என்ற நூல் அழைப்பிதழ் இது போன வருடம் இனமான காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் வெளியிடப்பட்டது
     

    வெள்ளி, 19 நவம்பர், 2010

    வித்தியாசமாக பதிலடி கொடுத்த விழுப்புரம் மாவட்ட பா.ம.க வினர்

  • வெள்ளி, 19 நவம்பர், 2010
  • போராளி
  • விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகம் எதிரே ஒரு டிஜிட்டல் பேனர் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

    அதில் உள்ள வாசகம்
     நம் நாட்டிற்கு சுதந்திரம் கொடுத்த வெள்ளையர்கள், சுதந்திரம் கொடுத்ததை தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. நாம் அவர்களை போற்றிக் கொண்டாடுவதில்லை. இது போல தான் வன்னியர் சங்க இட ஒதுக்கீடு போராட்டமும். இட ஒதுக்கீடு எவருடைய அப்பன் வீட்டு சொத்துமில்லை, அதை யாரும் இனாமாக கொடுத்திடவில்லை. அது நமது உரிமை. இட ஒதுக்கீடை பெற்றுத் தந்தவர்களுக்கு நன்றி மறக்கக் கூடாது .

    இது குறித்து நாம் விசாரித்த போது

    பொன்முடி
    விழுப்புரத்தில் நடந்த மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, எதிர்க்கட்சியா, தோழமை கட்சியா, தனித்திருக்கிறதா என தெரியாத ஒரு கட்சியின் தலைவர், விழுப்புரத்திலுள்ள 11 தொகுதியிலும் தனித்து நின்று வெற்றி பெறுவோம் என பேசியுள்ளார். பல சாதனைகளை செய்துள்ள நாம்,ஏன் வெற்றி பெற முடியாது என பேசியுள்ளார். மேலும் வன்னியர் சங்கப் போராட்டத்தின் போது உயிர் நீத்த, 21 பேருக்கு உதவித் தொகை, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி. இதை, தி.மு.க.,வில் உள்ள வன்னியர்கள், திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும் என்றும்.ஜாதி கட்சிகள் ஒரு போதும் வளராது என, பா.ம.க.,வை விமர்சித்தும் பேசியுள்ளார் இதற்கு பதிலடி தரும் விதமாகவே பாமக வினர் அந்த பேனரை வைத்துள்ளனர்.

    மேலும் ஒருவரிடம் இதுபற்றி பேசியபோது ’பொன்முடிக்கெல்லாம் இங்கு செல்வாக்கு இல்லை அவர் அமைச்சர் என்று  சொல்லிட்டிருக்கறாதாலதால் கொஞ்சம் செல்வாக்கு இல்லைனா அதுவும் கிடையாது போன நாடாளுமன்ற தேர்தல்லயே நாங்க இதை நிருபிச்சாச்சு எவ்வளவு பணம் செலவழிச்சாங்க இருந்து ஒண்ணும் பண்ண முடியல” என்று சொன்னார்.

    வியாழன், 18 நவம்பர், 2010

    கலைஞர் அவர்களின் எண்ணம் - பாமக எம்.எல்.ஏக்களின் நிலை

  • வியாழன், 18 நவம்பர், 2010
  • போராளி

  • வன்னியர்களின் ஓட்டுக்களைப் பெற்று ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள் எல்லாருக்கு மதிப்பளிக்க கூடியவர் என்றாலும் ஏதோ ஒரு  நினைப்பில் பாமக எம்.எல்.ஏக்களை நிற்க வைத்து அவமானப்படுத்திய இந்த படம்தான் எனக்கு கலைஞர் மேல் வைத்திருந்த நம்பிக்கையை சற்று நகர்த்திப்பார்த்தது. ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கான ஒட்டுமொத்த வன்னிய இனத்தையும் கேவலப்படுத்திய காட்சிதான் இது. ஒரு சீட்டுக் கூட பெற தகுதியில்லாதவர்களா இவர்கள்!

    சிட்டிங் எம்.எல்.ஏ.-க்கள் ஜெயிப்பார்களா? - திருவண்ணாமலை மாவட்டம் - ஜூனியர் விகடன் தொகுப்பு

  • போராளி
  • கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒன்பது தொகுதிகளில்... தி.மு.க. நான்கு தொகுதிகளிலும், காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும், பா.ம.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க-வால் வெற்றி பெற முடிந்தது. வரும் தேர்தலில் நிலவரம் எப்படி இருக்கும்..?

    பெரணமல்லூர்


    எதிரொலிமணியன்
    இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. பா.ம.க--வின் எதிரொலி மணியன். அ.தி.மு.க. வசம் இருந்த இந்தத் தொகுதியைக் கூட்டணி பலத்தோடு வென்றவர். சேத்துப்பட்டில் போக்குவரத்துப் பணிமனை, பெரணமல்லூரில் காவல் நிலையத்துடன் காவலர் குடியிருப்பு ஆகிய பணிகள் இவரது முயற்சியால் நடந்தவை. மறு சீரமைப்பில் இந்தத் தொகுதி நீக்கப்பட்டுவிட்டதால், போளூர் தொகுதியைக் குறி வைத்து இருக்கிறார் என்கிறார்கள். மக்களிடம் நன்றாகப் பழகுபவர் என்றாலும்கூட கூட்டணியே வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும்.

    தொகுதி மறுசீரமைப்பில் தண்டராம்பட்டு, பெரணமல்லூர் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு, கீழ்பெண்ணாத்தூர் என்ற புதுத் தொகுதி உருவாகி உள்ளது.


    இந்தத் தொகுதி தண்டராம்பட்டு மற்றும் திருவண்ணாமலை தொகுதிகளில் இருந்து சில பகுதிகளை உள்ளடக்கியது. இரு பகுதிகளிலும் தி.மு.க-வுக்கு ஓட்டு வங்கி அதிகம் என்பதால் தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
    பாமக போராடிதான் வெற்றி பெற வேண்டியிருக்கும்

    சிட்டிங் எம்.எல்.ஏ.-க்கள் ஜெயிப்பார்களா? - விழுப்புரம் மாவட்டம் - ஜூனியர் விகடனில் வெளிவந்த தொகுப்பு

  • போராளி
  • முகையூர்:
    பா.ம.க-வின் கலிவரதன் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ! கூட்டணி பலத்தால் வெற்றி பெற்ற இவர், முதலில் அரசு விழாவுக்கு மட்டும் தொகுதிக்கு வந்து கொண்டு இருந்தார். தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளி யேறிய பிறகு அரசு விழாவுக்காகக்கூட வருவதில்லை. பெரிய அளவில் அடிப்படை வசதிகளும் செய்து தரப் படவில்லை. தொகுதி மக்களிடையே நிலவும் அதிருப்தியால்... இவர் மீண்டும் போட்டி யிட்டால் வெற்றியை ருசிக்க ஏகப்பட்ட போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

    மேல்மலையனூர்:
    செந்தமிழ்ச்செல்வன்
    இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்ப வர் பா.ம.க-வின் செந்தமிழ்செல்வன். மேல் மலையனூர் தொகுதியை இந்த மாவட்டத்தின் அ.தி.மு.க. கோட்டை என்பார்கள். ஆனால், சென்ற தேர்தலின்போது அ.தி.மு.க-வின் கோஷ்டிப் பூசலே செந்தமிழ்செல்வன் வெற்றிக்கு காரணமாக இருந்தது. ஆனால், இவர் வெற்றி பெற்ற பின்பு தொகுதியில் பெரிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. தொகுதி மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. மீண்டும் ஸீட் கிடைத் தாலும் வெற்றி கடினம்தான்.


    புதிய மற்றும் நீக்கப்பட்ட தொகுதிகள்:
    மறுசீரமைப்பில் மேல் மலையனூர் தொகுதி நீக்கப்பட்டு உள்ளது. திண்டிவனத்தில் இருந்து சில பகுதிகளையும், மேல் மலையனூரில் இருந்து சில பகுதிகளையும் சேர்த்து மயிலம்தொகுதி உருவாக்கப்பட்டு உள்ளது. திண்டிவனம் தனித் தொகுதியாக மாற்றப்பட்டு உள்ளது. கண்டமங்கலம் தொகுதியை நீக்கிவிட்டு, விக்கிரவாண்டி என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டு உள்ளது. சின்னசேலம் தொகுதியை கள்ளக் குறிச்சியோடு இணைத்து கள்ளக்குறிச்சி என்ற புதிய தொகுதியை உரு வாக்கி இருக்கிறார்கள். திருநாவலூர் தொகுதியை நீக்கிவிட்டு, திருக்கோவிலூர் புதிய தொகுதி உருவாக்கப் பட்டு உள்ளது.

    எம்.எல்.ஏ-க்கள் பாஸா, ஃபெயிலா? - காஞ்சிபுரம் மாவட்டம் - இது ஜுனியர்விகடனில் வெளிவந்த கருத்தின் தொகுப்பு

  • போராளி
  • காஞ்சிபுரம்:
    சக்தி கமலாம்பாள்
    இந்த தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பா.ம.க-வின் சக்தி கமலாம்பாள். வெகுளியான அம்மையார். எளி தாக அணுக முடியும். ஆனால், தொகுதியில் பெரிதாக எந்த வேலையும் நடக்கவில்லை. தொகுதி வாசிகளுக்கு ஓரளவு பரிச்சயம் என்றாலும் கூட, சொந்தக் கட்சியினர் இவருடன் முரண்டு பிடிக்கிறார்கள். ஸீட் கிடைப்பதும் சந்தேகமே... கிடைத்தாலும், உள்ளூரில் சொந்தக் கட்சியினரின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டணி ஆகியவையே இவரது வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும். வெற்றி கடினமே.என்று அதில் போட்டிருக்கிறது எனவே தாங்கள் தொகுதியை தக்க வைக்க அதற்கான வேலையை துவங்கினால் வெற்றி நிச்சயம்.

    து. மூர்த்தி

    திருப்போரூர்:
    பா.ம.க-வின் து.மூர்த்தி எம்.எல்.ஏ-வாக இருக்கும் இந்த தொகுதியில், இப்போதுதான் திருப்போரூர் - நென்மேலி பாலம் கட்டுவது, செங்கல்பட்டு - திருப் போரூர் சாலை அகலப்படுத்துவது போன்ற பணிகள் நடக்கின்றன. இதைவிட்டால், சாதனை என்று சொல்ல எதுவும் இல்லை. ஆனால், தொகுதிவாசிகள் மிஸ்டுகால் கொடுத்துக் கூப்பிடும் அளவுக்கு மனிதர் மகா எளிமை. 'மூர்த்திதான் மதுராந்தகம் தொகுதியின் வேட்பாளர்...' என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்து இருக்கிறார். ஆனாலும், பலமான கூட்டணி இருந்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. நிலைமை இழுபறிதான்.

    
    திருக்கச்சூர் ஆறுமுகம்
    
    செங்கல்பட்டு:
    இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. பா.ம.க-வின் திருக்கச்சூர் ஆறுமுகம். தொகுதியே கதி என்று கிடப்பவர். மக்கள் பிரச்னை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பவர். ஆனால், திட்டப்பணிகள் என்று பார்த்தால்... தொகுதியில் பெரிய அளவில் ஒன்றும் நடக்க வில்லை. வரும் தேர்தலில் திருப் போரூர் தொகுதியில் இவர் போட்டி யிடுவார் என்கின்றனர் கட்சியினர். கூட்டணியைப் பொறுத்துதான் வெற்றி வாய்ப்பு என்றாலும் போட்டி யிட்டால் தேறுவார்.


    புதியதாக உருவான மற்றும் நீக்கப்பட்ட தொகுதிகள்:
    அச்சிறுப்பாக்கம் தொகுதி நீக்கப்பட்டு செய்யூர் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது சோழிங்கநல்லூர் மற்றும் பல்லாவரம் தொகுதிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
    மேற்கண்ட இரு தொகுதிகளிலும் பாமக விற்கு வெற்றி வாய்ப்பு பலமாக உள்ளது எனவே தகுந்த களப்பணியாற்றினால் ஓரளவிற்கு வெற்றி எளிமையாக கிடைக்க வாய்ப்புள்ளது இதுதான் இன்றைய நிலைமை.

    புதன், 17 நவம்பர், 2010

    கஷத்ரியன் இதழ் தொகுப்பு (1923-1951) - 17 தொகுதிகள்

  • புதன், 17 நவம்பர், 2010
  • போராளி


  • வன்னியர்களை பற்றிய முழுமையான வரலாற்று தொகுப்பு அர்த்தநாரீஸ்வர வர்மா அவர்களின் சத்ரியன் நூல் தொகுப்பு தமிழில் திரு அண்ணல் அவர்களால் 17 புத்தகங்களாக..... , ஒவ்வொரு வன்னியர் வீட்டிலும் இருக்க வேண்டிய அறிய பொக்கிஷம் ...


                                                        மேலும் தொடர்புக்கு,
                                                      ஆறு.அண்ணல் -9381039035

    பாமக நிர்வாகிகள் நியமனம் - விழுப்புரம் (கள்ளக்குறிச்சி) மாவட்ட ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் நியமனம்

  • போராளி
  • பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் (கள்ளக்குறிச்சி) மாவட்ட ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


    ஒன்றியச் செயலர்கள்:
                 சின்னசேலம் (வடக்கு)- கோவிந்தன்,
                தெற்கு- முத்துவேல்,
                கள்ளக்குறிச்சி(வடக்கு)- எஸ்.டி.ராமு,
                (தெற்கு)- சரவணன்,
               கல்வராயன்மலை(வடக்கு)- கண்ணன்,
               (தெற்கு)- சம்பத்,
                சங்கராபுரம்(வடக்கு)- கிருஷ்ணகுமார்,
                 (தெற்கு)- லோகநாதன்,
                தியாகதுருகம்(வடக்கு)- ஏழுமலை,
                (தெற்கு)- தண்டபாணி.

                  கள்ளக்குறிச்சி நகரச் செயலர்- அபுசாலிக்,
                   பேரூராட்சி செயலர்கள்:
                   சின்னசேலம்- செல்வராஜ்,
                   சங்கராபுரம்- பப்லு,
                   வடக்கனந்தல்- துரைசாமி,
                    தியாகதுருகம்- செல்வம்.

    இவர்களை மாநில துணைச் செயலர் ம.அன்பழகன் பரிந்துரையின் பேரில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதியின் பேரில் பாமக தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ நியமனம் செய்துள்ளார்.

    செவ்வாய், 16 நவம்பர், 2010

    பக்ரீத் வாழ்த்துக்கள் - டாக்டர் அய்யா

  • செவ்வாய், 16 நவம்பர், 2010
  • போராளி
  • மருத்துவர் அய்யா
    பக்ரீத் நாளில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் "ஹஜ்' என்னும் புனிதப் பயணம் மேற்கொண்டு மெக்கா நகரில் ஒன்றுகூடி இறைபுகழ் பாடுகின்றனர். உலகில் நடைபெறும் மிகப்பெரிய சகோதரத்துவ விழாவாகும். முஸ்லிம்களுடன் அனைவரும் கைகோர்த்து இறைவனின் கட்டளைக்குப் பயந்து உலகம் அமைதிப் பூங்காவாக திகழ சபதம் ஏற்போம்.
    டாக்டர்அன்புமணி
     
    ஏ.கே.மூர்த்தி
    
     
    ஜி.கே.மணி
         
    
    பண்ருட்டிவேல்முருகன்
      
    இரா.வேலு
    

    மாவீரன் ஜெ.குரு

      
     













    லகெங்கும் வசிக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் இதயங்கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகள்.