புதன், 20 அக்டோபர், 2010
வெள்ளி, 15 அக்டோபர், 2010
ஈழத் தமிழர்களுக்காக போராட்டத்தில் தமிழின போராளி


ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப் படுவதற்கும், வெற்றி
பெறுவதற்கும் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு உருவாவதற்கு முழுமையாகஉதவுவோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் கூறுகிறது.
சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில், நடந்த மாநாட்டில், உலகத் தமிழர் பிரகடனத்தை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ படித்து வெளியிட்டார்.
உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு
1. ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்குஉத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலகமக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
2. தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணுகிறோம்.
3. தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக்
குடியேற்றங்களையும், சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.
4. இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான
கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில்போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.
5. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதிபூணுகிறோம்.
6. அளப்பரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக
இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப்
போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம்
முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி
ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக
உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.
பிரகடனம் படித்து முடிக்கப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு உதவ சர்வபறி
தியாகத்திற்கும் தயார் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஏராளமான கருஞ்சட்டை தரித்த பா.ம.க தொண்டர்கள் மற்ற கட்சிகளின் இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி அந்த உறுதிமொழியை ஏற்றனர். அவர்கள் அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின்வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.
அக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அதன் பிறகும் 3 லட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து வதைப்பது ஏன்? முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். 15 வயதைக் கடந்த தமிழ் ஆண்கள் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது. இந்த அவலங்களை காண மனித உரிமை ஆர்வலர்களால் அங்கு செல்ல முடியவில்லை. ஆனால் முதல்வர் கருணாநிதி இலங்கையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார். இப்போது அங்கு சுமுக நிலை நிலவுகிறதா என்பதை அவர் தனது மனசாட்சிப்படி கூறட்டும்.
1985-ம் ஆண்டு டெசோ மாநாட்டில் பேசிய கருணாநிதி, தமிழ் ஈழம்தான் இறுதித் தீர்வு; தமிழ் ஈழத்தை ஆதரிப்பதற்காக எந்த அடக்குமுறையை ஏவிவிட்டாலும் தாங்கிக் கொள்ளத் தயார் என்றார். அன்று கருணாநிதி கூறியதைத்தான் இன்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் எங்கள் மீது அவர் அடக்குமுறையை ஏவுகிறார் என்றார் ராமதாஸ்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க
ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் பேசியதாவது:
தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது குற்றமாகாது; அந்த
இயக்கத்துக்கு ஆயுத உதவி உள்ளிட்ட உதவிகளை செய்தால் மட்டுமே குற்றம் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பின் படியே, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.
எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதில் தவறில்லை. அவ்வாறு பேசக் கூடாது என தமிழக அரசு கூறுவது அடக்குமுறை நடவடிக்கை ஆகும் என்றார்.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன், புதிய பார்வை ஆசிரியர் எம். நடராஜன், மக்கள்
கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாகி ஹென்றி திபேன் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, பண்ருட்டி வேல்முருகன் , ஏ.கே.மூர்த்தி,இலங்கைத் தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வகை:
மாமல்லபுரத்தில் மாமல்லன் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம்
.jpg)
மாமல்லபுரத்தில் டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்த மாமல்லன் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாமல்லபுரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. செங்கல்பட்டில் 2 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மாமல்லன் சிலை உடைப்பு1992& ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த சித்ரா பவுர்ணமி வன்னியர் இளைஞர் பெருவிழாவன்று அங்குள்ள பைபாஸ் சாலை நுழைவு வாயில் அருகில் வன்னியர் சங்கம் சார்பில் கருங்கல்லினால் நிறுவப்பட்ட மாமல்லன் சிலையை டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்திருந்தார்.
நேற்று நள்ளிரவு மர்ம ஆசாமிகள் சிலர் மாமல்லன் சிலையை உடைத்து சேதப்படுத்தினர். சிலையின் கையில் பிடித்திருந்த கத்தி உடைந்து காணப்பட்டது. மேலும் சிலையின் கீழிருந்த பா.ம.க., வன்னியர் சங்க கல்வெட்டுகளை உடைத்து, கொடிகள் எரித்து ஸேதப்படுத்தப்பட்டிருந்தன.பா.ம.க. சாலை மறியல்இதையடுத்து மாமல்லன் சிலை உடைக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் நேற்று காலை 8 மணி அளவில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் சுமார் 2 ஆயிரம் பேர் சிலை உடைக்கப்பட்ட பகுதியில் திரண்டனர்.மாமல்லன் சிலையை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை கைது செய்யக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் பா.ம.க. மாநில துணைப்பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர் என்.எஸ்.ஏகாம்பரம் ஆகியோர் தலைமையில் மாமல்லபுரம் நகர செயலாளர் வ.பாலன், பா.ம.க. மாவட்ட நிர்வாகிகள் பி.வி.கே. வாசு, என்.கணேசமூர்த்தி, நகர நிர்வாகிகள் எம்.ஆர்.சீனிவாசன், எம்.பி.தயாளன், சத்திரிய வன்னிய இளைஞர் சங்க தலைவர் பி.வி.களத்தூர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் மாமல்லபுரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.போலீஸ் குவிப்புகாஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயுதப்படை போலீசார் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் சின்கா, செங்கை வருவாய் கோட்ட அலுவலர் லெனின் ஜேக்கப் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலையை உடைத்த மர்ம ஆசாமிகளை கைது செய்ய வேண்டும், மீண்டும் அதே இடத்தில் புதிய மாமல்லன் சிலையை அமைத்து கொடுக்க வேண்டும் என்று ஆர்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். புதிய சிலை நிறுவ நடவடிக்கை எடுப்பதாகவும், மர்ம ஆசாமிகளை கைது செய்வதாகவும் உறுதி அளித்ததன் பேரில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியலை கைவிட்டனர்.4 மணி நேரம் பாதிப்புஇந்த சாலை மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் காலை 8 மணி முதல் 12 மணி வரை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது புதுவைக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. மாமல்லன் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருக்கழுக்குன்றத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் காலை முதல் மதியம் வரை ஓடவில்லை. மதியத்துக்குப்பின் ஒருசில பஸ்கள் ஓடின. செங்கல்பட்டில் பஸ்களின் கண்ணாடிகள் உடைப்புமாமல்லபுரத்தில் மாமல்லன் சிலையை உடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டில் பா.ம.க.வினர் போராட்டத்தில் குதித்தனர். செங்கல்பட்டில் இருந்து வேடந்தாங்கலுக்கு சென்ற தனியார் பஸ்சை புதிய பஸ் நிலையம் அருகே நிறுத்தி அதன் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பின்பு கடப்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு பஸ் நிலையத்திற்கு வந்த அரசு பஸ் மீது பெரிய கல்லை தூக்கிப் போட்டு முன் பக்க கண்ணாடியை உடைத்தனர். பின்னர் தனியாருக்கு சொந்தமான ஸ்வீட் கடை மற்றும், பேன்சி ஸ்டோர் கடைகளையும் அவர்கள் சூறையாடினர். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வகை:
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் வேலை வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் பேச்சு
.jpg)
பாட்டாளி மக்கள் கட்சியின் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் கும்மிடிப்பூண்டி மற்றும் பெரியப்பாளையம் பகுதிகளில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு பா.ம.க வடக்கு மாவட்டச்செயலாளர் க.ஏ.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சீதாராமன், வே.சரவணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத்தலைவர் கோ.க.மணி, முன்னாள் அமைச்சர் வேலு, மாநில துணைபொதுச்செயலாளர் ரவிராஜ், தலைமை நிலைய செயலாளர் முத்துகுமார், இசக்கி படையாச்சி, துரை.ஜெயவேலு, மாவட்ட தலைவர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய கொள்கை விளக்க அணி செயலாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசும் போது கூறியதாவது; வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு 1980 &ம் ஆண்டு கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். துப்பாக்கி சூடு கூட நடைபெற்ற அந்த போராட்டத்தின் போது 100 க்கும் மேற்பட்டவர்கள் சிறை சென்றனர். அந்த வகையில் பா.ம.க. வரலாற்றில் கும்மிடிப்பூண்டி மறக்க முடியாதது ஆகும்.
2011ஆண்டு தமிழ்நாடு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விவசாயம், கிராம வளர்ச்சி, இளைஞர்களின் மறுமலர்ச்சி, தமிழ் வளர்சி இவற்றுக்கு எல்லோம் பா.ம.க. திட்டம் போட்டு இருக்கிறது. அதனை வல்லுனர்கள் எல்லாம் பாராட்டுறாங்க. அதை நிறைவேற்ற பா.ம.க. தொண்டர்கள் பாடுபட வேண்டும். மதுக்கடை வேண்டாம் என்று கன்னியாகுமாரியில் இருந்து, கும்மிடிப்பூண்டி வரை நான் கேட்டு வருகிறேன். ஓட்டுப் போடும் ஜாதியாக மட்டுமே வன்னிய ஜாதியை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் சமூகமாற்றம் உருவாக வேண்டும் என்றால் பொது மக்கள் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் வேலை வழங்க வேண்டும். இதுவே பா.ம.க.வின் அரசியல் திட்டமாக உள்ளது. இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். முன்னதாக பிரகாஷ் வரவேற்றார். முடிவில் முருகதாஸ் நன்றி கூறினார்.108 ஆம்புலன்ஸ் திட்டம்ஆத்துப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க&வின் கனவு திட்டம்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம. தமிழகத்தில் அதை தற்போது யார்? யாரோ? தாங்கள் கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்து கொள்கின்றனர் என்று கூறினார்.முன்னதாக ஆத்துப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொத்தமான பெட்ரோல் பங்கை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
வகை:
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




.jpg)
.bmp)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)



