• முதல்- அமைச்சர் கருணாநிதியும் டாக்டர் ராமதாசும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கி கொடுத்துள்ளது. மேலும் ஒரு மேல்-சபை எம்.பி. தொகுதியும் கொடுக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.
  • திண்டிவனத்தை அடுத்த கோனேரி குப்பத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை தொடக்கவிழாவில் பேசிய கவர்னர்.
  • இளைஞர்களுக்கான பயிற்சிமுகாமில் கலந்துகொண்ட டாக்டர் சின்னைய்யா அவர்கள் பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்களை நீக்க பரிசிலிப்பதாக அறிவித்தார்.
  • சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் அய்யா தற்போதைய சூழலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புவதாக கூறினார்.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொறுப்பாளர்கள்

  • திங்கள், 21 பிப்ரவரி, 2011
  • போராளி

  • மாநிலப் பொறுப்பாளர்கள்
    வ.எண் பெயர் பொறுப்பு
    1 மருத்துவர் அய்யா நிறுவனர்
    2 சின்ன அய்யா இளைஞர் அணித்தலைவர்
    3 கோ.க.மணி தலைவர்
    4 ச.வடிவேல் இராவணர் பொதுச்செயலாளர்
    5 க.அக்பர் அலி சயீப் பொருளாளர்
    6 ஜெ.குரு வன்னியர் சங்கத்தலைவர்
    7 தி.வெல்முருகன் இணை பொது செயலாளர்
    8 இராம முத்துக்குமார் தலைமை நிலையச் செயலாளர்
    9 மு. இசக்கி மாநில அமைப்புச் செயலாளர்

    வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

    தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு: பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள்; கருணாநிதி அறிவிப்பு

  • வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
  • போராளி

  • 
    மருத்துவர் அய்யா &  முதல்வர் கலைஞர்
     தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தற்போது முக்கிய கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் நீடிக்கின்றன. டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வும் தி.மு.க. அணியில் இடம் பெறும் என்று கடந்த சில தினங்களாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 9 மணி அளவில் கோபாலபுரத்தில் உள்ள முதல் - அமைச்சர் கருணாநிதி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 2 மணி நேரம் பேசினார்கள். அப்போது டாக்டர் ராமதாஸ் தனது பேரன் திருமண அழைப்பிதழை முதல் - அமைச்சர் கருணாநிதியிடம் கொடுத்து மணவிழாவுக்கு வரும்படி அழைத்தார்.

    இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி முதல்- அமைச்சர் கருணாநிதியும் டாக்டர் ராமதாசும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கி கொடுத்துள்ளது. மேலும் ஒரு மேல்-சபை எம்.பி. தொகுதியும் கொடுக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.

    தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உடன்பாடு குறித்து முதல் - அமைச்சர் கருணாநிதி கூறியதாவது:-

    டெல்லிக்கு நான் சென்றிருந்தபோது, சோனியா காந்தியை சந்தித்து - வர விருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றைக்குப் பாட்டாளி மக்கள் கட்சியோடு ஒப்பந்தம் ஏற்பட்டு தி.மு.க.வுடன் இணைந்து இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியும் போட்டியிடும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    முதல் - அமைச்சர் கருணாநிதியை சந்தித்த பிறகு டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
    \
    கேள்வி:- 2 மணி நேரமாக முதல்வரோடு பேசியிருக்கிறீர்கள். என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்?

    பதில்:- எனது பேரன் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக வந்தேன். அதோடு தேர்தல் உடன்பாடும் ஏற்படுத்திக் கொள்ள வந்தேன். மகிழ்ச்சியோடு முதல்வரைச் சந்திக்கச் சென்றேன். இப்போது மகிழ்ச்சியோடு உங்களைச் சந்திக்கிறேன்.

    கேள்வி:- எத்தனை சீட் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது?

    பதில்:- 31 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதோடு ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.


    கேள்வி:- கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதிகளில் போட்டியிடுவீர்களா?

    பதில்:- எந்தெந்த தொகுதிகள் என்பதை தேர்தல் குழுக்கள் முடிவு செய்யும்.

    கேள்வி:- சோனியா காந்தியை எப்போது சந்திப்பீர்கள்?

    பதில்:- முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி இரண்டு நாட்களுக்கு முன்பு சோனியாகாந்தியை சந்தித் திருக்கிறார்.

    கேள்வி:- திருமண அழைப்பிதழைக் கொடுக்க வந்த நீங்கள், தேர்தல் உடன்பாட்டை எதிர்பார்த்து வந்தீர்களா?
    பதில்:- எதிர்பார்த்துதான் வந்தேன்.

    கேள்வி:- 45 தொகுதிகள் ஒதுக்கும் கட்சியோடுதான் கூட்டணி வைப்போம் என்று சொன்னீர்களே?
    பதில்:- தேர்தலுக்கு முன்னால் ஊடக நண்பர்களைச் சந்திக்கும்போது நாம் எண்ணிக்கையை அதிகப்படுத்தித்தான் சொல்ல வேண்டும்.


    கேள்வி:- தி.மு.க. மற்றும் அதனோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் கட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம் என்று எதிர்க்கட்சியினர் சொல்லியிருக்கிறார்களே?

    பதில்:- வருகிற சட்ட மன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான அணியில்- தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இன்னும் பல கட்சிகள் சேரவிருக்கின்றன. இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.

    கேள்வி:- கடந்த முறை அள்ளியும் கொடுக்க வில்லை- கிள்ளியும் கொடுக்கவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். இந்த முறை அதே அளவிற்குத் தான் சீட் பெற்றிருக்கிறீர்களே?

    பதில்:- நீங்கள் அதை எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளுங்கள்.

    கேள்வி:- பாட்டாளி மக்கள் கட்சியினுடைய பார் கெயினிங் பவர் குறைந்து இருக்கிறதா?

    பதில்:- குறையவும் இல்லை - கூடவும் இல்லை.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்

    புதன், 16 பிப்ரவரி, 2011

    தமிழ் ஓசை நாளெடு துவக்க விழா - தலையங்கம்

  • புதன், 16 பிப்ரவரி, 2011
  • போராளி


  • கடந்த நூற்றாண்டில் முப்பெரும் இயக்கங்கள் தமிழ்ச் சமுதாயத்தை புதிய வார்ப்படத்தில் வடித்தன, அவை - தமிழர் இயக்கமாகப் பரிணமித்த சமூக நீதி இயக்கம். தமிழர்களுக்கு மான உணர்ச்சியையும். அறிவார்ந்த பார்வையையும் பாய்ச்சிய தன்மான இயக்கம். சமுதாயத்தில் எல்லாத் துறைகளிலும் தமிழுக்கே முதன்மையான பீடம் அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பிய தமிழ் இயக்கம் ஆகியவையே, சமூக நீதி இயக்கம் - தமிழர்களுக்கு உரிமை வேட்கையைப் பாய்ச்சியது, தன்மான இயக்கம்- தமிழர்களுடைய மனங்களுக்குப் பூட்டப்பட்டிருந்த விலங்குகளை உடைத்து. சுய சிந்தனைக்கும் அறிவார்ந்த பார்வைக்கும் வழி வகுத்தது, தமிழ் இயக்கம் - மூலையில் ஒதுக்கப்பட்டுக் கிடந்த தமிழுக்குப் பல்வேறு துறைகளிலும் முன்னுரிமை அளிக்கக்கோரியது,


    அதோடு கடந்த நூற்றாண்டின் மத்தியில் கிராமங்களிலெல்லாம் ஏற்பட்ட கல்விப்புரட்சி - காலகாலமாகக் கல்வி மறுக்கப்பட்டு. ஒடுக்கப்பட்டுக் கிடந்த கோடானகோடி மக்களிடையே புதிய வெளிச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது, சமூக ரீதியாகவும். கல்வி அடிப்படையிலும். கலாச்சார அடிப்படையிலும் ஒதுக்கப்பட்டுக் கிடந்த மக்களிடையே விழிப்புணர்ச்சியும். உரிமைத்துடிப்பும் மேலோங்கி நிற்கின்றன, இந்த மகத்தான சமுதாய புரட்சிக்கு வழிவகுத்த முப்பெரும் இயக்கங்களுக்கும். அவற்றின் மூலவர்களான நமது மூதாதையர்களுக்கும்- தமிழினத்தின் சார்பில். தமிழோசை நாளிதழ் இதயாஞ்சலியைத் தெரிவித்து. தனது பயணத்தை இன்று தொடங்குகிறது, அரசியல் சார்பற்ற நடுநிலை இதழான தமிழோசை - தமிழனின் குரலாக ஒலிக்கும்,
    சமூக நீதி என்றால் அதை இடஒதுக்கீடு என்று சுலபமாகச் சுருக்கிவிடுகிறார்கள், ஆனால். அதன் வரம்பும் பொருளும் விரிவானவை, அரசு நிர்வாகப் பணிகளில் மட்டுமின்றி. பொருளாதாரம். தொழில்துறை. கலாசாரம். நீதி. பரிபாலனக் கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளிலும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமையான பிரதிநித்துவ பங்கு கிடைக்குமாறு செய்வதில் தமிழோசை முன்னின்று போராடும், தற்போதைய சமூக அமைப்பு - மேடுபள்ளங்களை ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டது, சமதளத்தில் அமைந்திராத சமுதாயத்தில் சம வாய்ப்பு என்பது வெறும் கானல் நீராகும், எனவே சமச்சீருடைய சமதளச் சமுதாயம் அமைவது வரையில். சமூகநீதிக்கொள்கை துடிப்புடன் செயற்படுத்தப்படவேண்டும்- என்பதற்காக பாடுபட தமிழோசை கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது,


    அதே சமயத்தில் தற்போதைய பொருளாதார நிலவரங்கள். பணக்காரன் பெரிய செல்வந்தனாக உயர்வதற்கும். ஏழை பரம ஏழையாக நொடிப்பதற்கும் வகைசெய்து வருகின்றன, இந்நிலையில் பொருளாதார ரீதியாக ஏழை. எளிய மக்களை-தக்க பொருளாதார திட்டங்கள் மூலம் கைதூக்கிவிட்டு. சமதர்ம சமத்துவச் சமுதாயத்தை நிறுவும் விதத்தில் அரசினரின் கொள்கைகள் அமைந்திருக்கவேண்டுமென்ற கோரிக்கையைத் தமிழோசை ஓயாது வற்புறுத்தி வரும், தமிழ் நிலத்தின் பாரம்பரியப் பண்பாடு - சகிப்புத்தன்மையும் சமய நல்லிணக்க உணர்வுமே ஆகும், அந்த முறையில் நமது அரசியல் சாசனத்தின் தோற்றுவாயிலேயே முத்திரிக்கப்பட்டுள்ள சமயச் சார்பற்ற கோட்பாட்டின் நெறிமுறைகளைக் கட்டிக் காப்பதில் தமிழோசை ஆர்வத்துடன் பணியாற்றும்,


    உலககெங்கும் பரவலாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கிடையே கலாச்சாரப் பாலமாக தமிழோசையின் பணிகள் அமைந்திருக்கும், தேசீயத் தமிழினத்தின் ஓர் அங்கமான ஈழத் தமிழர்- தாய்த் தமிழகத்துடன் இரத்த சம்பந்தமுடையவர்கள், அந்த முறையில். ஈழத் தமிழரின் நியாயமான கோரிக்கைகளான சுயமரியாதையுடன் கூடிய வாழ்வுரிமை. மொழியுரிமை. கலாச்சாரப் பாதுகாப்புரிமை. சமத்துவக் குடியுரிமை ஆகிவற்றிற்கு ஈடுதரக்கூடிய விதத்தில் ஈழப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்படவேண்டும் என்பதை உரத்த குரலில் ஓங்கி ஒலிக்கும் -தமிழோசை,


    அடுத்து. தமிழின் பலமுனை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும் - அதற்கான திட்டங்களை முன்னின்று செயற்படுத்துவதற்குமாக நிறுவப்பட்டுள்ள பொங்கு தமிழ் வளர்ச்சி அறகட்டளை நிறுவனம் - தமிழ்க் கலாச்சார மேம்பாட்டுக்குரிய கருவியாகத் தமிழிசோசையைத் தொடங்கியுள்ளது, தமிழிரியக்கம். தமிழியக்கம். தமிழிசையியக்கம் ஆகிய மும்முனைகளில் ஆக்கப்பணிகளை ஆற்றுவதற்குத் தமிழோசை தன்னைத்தானே அர்ப்பணித்துக்கொள்கிறது, திரட்டிக் கூறுமிடத்து. தனிமனித உரிமை. குடும்ப உறவுகளின் அந்தரங்கப் புனிதம். சமூகங்களுக்கிடையே ஒப்புரவு ஆகிய மக்களாட்சி அம்சங்களின் ஆரோக்கிய அடித்தளத்தை வலுப்படுத்துவதில் தமிழோசை முனைந்து பாடுபடும், தமிழகத்தின் வளர்ச்சி. தமிழினத்தின் எழுச்சி. தமிழின் பலமுனை மேம்பாடு - ஆகியவற்றுக்கு ஓயாது உழைக்க தமிழோசை தன்னைத்தானே அர்ப்பணித்துக்கொள்கிறது, தமிழோசையின் இந்த ஒப்பற்ற கலாச்சார சீரமைப்புப் பணிக்கு விழிப்புள்ள தமிழ்ப் பெருமக்களின் ஆதரவு பொங்கியெழுந்து வருவது நிச்சயம் என்ற திட நம்பிக்கையுடன். தமிழோசை தனது கொள்கைப் பட்டயத்தை தமிழ்ச்சமுதாயத்தின் முன் அன்புரிமையுடன் படைப்பதில் பெருமை கொள்கிறது,
     
                                                                 தமிழ் ஓசை
                                       சமூக அநீதிகளுக்கு எதிரான இடியோசை
                                       தமிழ்க்கலாச்சாரத்தின் குழலோசை
                                       வருங்காலத் தமிழகத்தின் மணியோசை

    தமிழ் இனத்தின் இதய கீதம் (தமிழ் ஓசை தொடக்க நாள் இதழின் முதல் பக்கத்துக்குரிய சிறப்புத் தலையங்கம்)

    ஆவடி பயிற்சி முகாமிற்கு வருகை புரிந்த டாக்டர் அய்யா அவர்களை வாழ்த்தி கே.என்.சேகர்

  • போராளி


  • பாட்டாளி மக்கள் கட்சி 2007 ஆம் ஆண்டு நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்

  • போராளி

  • பாமக மக்களுக்காக என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கும், நடிப்பின் மூலம் புகழ்பெற்று நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்றுவேன் என்று வசனம் பேசும் கட்சிக்கும், எங்களை ஏளனமாக பார்க்கும் பிற கட்சியினருக்கும் , பாமகவை பற்றி விமர்சிப்பவருக்கும், எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் ஒரு ஆண்டில் நடத்திய மக்கள் நல போராட்டங்கள் எத்தனை என்று எங்களால் இயன்ற அளவில் தகவல்களை வெளியிடுகிறோம் . இதோ உங்களின் பார்வைக்காக

     2007 ஆம் ஆண்டு மருத்துவர் அய்யா அவர்கள் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்

    30.03.07 27

    சதவீத இடஒதுக்கீட்டிற்கு தடை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும்.
    03.04.07

    காலை 10.00 மணிக்கு சென்னையில் மானமீட்பு இயக்கம் நடத்திய கிரிக்கெட் விளயாட்டை தடைசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்.
    04.04.07
    பூந்தமல்லி கூத்தப்பாக்கம் நில ஆக்கிமிரப்பு. பொதுக்கூட்டம்.

    18.04.07
    சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் நுழைவதை கண்டித்து அக்கடைகடை மூடக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்.

    09.05.07

    சிமெண்ட் விலை ஏற்றத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.

    15.05.07
    சென்னையில் மது ஒழிப்பு பிரச்சாரம் துவக்கி வைத்தல்.

    18.05.07
     சென்னையில் மது ஒழிப்பு பிரச்சாரப் பொதுக்கூட்டம்.

    05.06.07
    பள்ளி, கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.

    02.07.07
    சுயநிதிக் கல்லூரிகள் அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்.

    06.08.07
    திருநெல்வேலி தூத்துக்குடி பகுதியில் டைடானியம் தொழிற்சாலை அமைவதை கண்டித்து சாத்தான்குளம், இராதாபுரம் மக்களிடம் கருத்து கேட்டறிதல்.
    07.08.07
    நெல்லைதூத்துக்குடி தாமிரபரணி ஆற்றில் மணல்கொள்ள தடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

    13.08.07
    காலை சோழிங்கநல்லூரில் அனல்மின் நிலையம் அமைவதை பொதுமக்களிடம் கருத்து கேட்பு.

    20.08.07
    காலை 10.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கொள்ளயை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்.

    20.04.2007
    இலங்கை அரசுக்கு நடுவண் அரசு போர்க் கருவிகள் வழங்குவதை நிறுத்தக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்.

    21.08.07
     சேலத்தில் மணல் தடுப்பு போராட்டம்.

    05.09.07
     முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமாரசாமி கல்வி அறிக்கை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம் சென்னையில்.

    08.09.07
    காலை 10.00 மணிக்கு கிருத்துவர்கள் உண்ணாவிரதம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு.

    16.09.07
    மாலை 4.00 மணிக்கு கடலூர் தியாகவள்ளி என்ற ஊரில் புதிய அனல் மின்நிலையம் அமைவதை எதிர்த்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு.

    12.11.07
    காஞ்சிபுரம் மாவட்டம், படாலம் சர்க்கரை ஆலையை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து போராட்டம்.

    22.11.07
    காலை 11.00 மணிக்கு 27% சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தக்கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம்.

    பிற்படுத்ப்பட்ட மாணவருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை மாணவர் சங்கம் சார்பில் ஆடு, மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்.

    செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

    தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்கள் - பாமக அளித்த திட்ட வரைவுகள் மற்றும் பாமகவின் போராட்ட வரலாறுகள்

  • செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
  • போராளி
  • பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு மற்றும் கட்சி நடத்திய மக்கள் நல போராட்டங்கள் , நடத்திய மாநாடுகள், பேரணிகள் பற்றிய குறிப்புகள் ஆகியவை இங்கு மின் நூல்களாக இடம்பெற இருக்கின்றன .

    உங்களிடம் ஏதேனும் கட்சியைப் பற்றிய படங்கள் , கட்டுரைகள் இருந்தால் கீழ்க்கண்ட எமது மின்னஞ்சம் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    மின்னஞ்சல் முகவரி: pmkayya@gmail.com

     பாமக மற்றும் வன்னியர்களின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

    உங்களுக்காக சில நூல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .அவற்றை படியுங்கள் வரலாற்றை அறியுங்கள்.
    பாமக முற்போக்கு சிந்தனையுடன் தமிழக அரசிற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து தந்துள்ளது

    அவற்றில் சிலவற்றை இங்கு உங்களின் பார்வைக்கு வைத்துள்ளோம்

    பாமக எப்படி பட்ட தொலைநோக்கு பார்வை கொண்டது என்பது உங்களுக்கு விளங்கும்

    1. தமிழகம் 2020 ல் எப்படி இருக்கும் என்பதற்கான திட்டம்




    2.  தமிழக வேளான் ஊரக வளர்ச்சித் திட்டம்



    3. தமிழக அரசிற்கான வேளான் நிழல் நிதி அறிக்கை:



    4. தமிழக தொழில் வளர்ச்சி ஒரு மாற்றுத்திட்டம்:



    5. சென்னை பெருநகருக்கான மாற்று போக்குவரத்து திட்டம்






    1. பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு
    இங்கே நூல் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது
    அனைத்து நண்பர்களும் உறவினர்களும் படித்துப் பார்க்கவும்





    2. வன்னியர்களின் இன்றைய நிலை குறித்த இரா. அருள் அவர்களின் கட்டுரை:




    3. பாமக விற்கு வாக்களிப்பதால் தமிழகத்திற்கு கிடைக்கும் 100 நன்மைகள்:
     கடந்த நாடளுமன்ற தேர்தலில் வெளியிடப்பட்ட அறிக்கை


    4. கனல் மாத இதழ்:


    புதன், 9 பிப்ரவரி, 2011

    மக்கள் தொகை கணக்கெடுப்பு - அனைத்து சொந்தங்களும் உடனே பதிவு செய்திடுக

  • புதன், 9 பிப்ரவரி, 2011
  • போராளி
  • சென்னை: நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் ஒன்றரை லட்சம் அலுவலர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2011&ம் ஆண்டுக்கான 15&வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி பிப்ரவரி 9&ல் தொடங்கி 28&ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாடு முழுவதும் இந்தப் பணி இன்று காலை தொடங்கியது. அலுவலர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் விவரங்களை சேகரித்தனர்.


    இப்பணியில் ஆசிரியர், அரசு அலுவலர்கள் உள்பட 29 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 9 ஆயிரம் பேர் கணக்கெடுக்கின்றனர். தமிழகம் முழுவதும் 150 நகராட்சிகளின் ஆணையாளர்கள், மற்ற இடங்களில் வட்டாட்சியர்கள், மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர்கள் முன்னிலையில் பணி நடந்து வருகிறது.



    கணக்கெடுப்பின்போது பெயர், பிறந்த தேதி, திருமணம் ஆனவரா, தாய் மொழி, இடம் பெயர்ந்தவரா, மாற்றுத் திறனாளியா, வேலை வாய்ப்பு, மதம், எத்தனை குழந்தைகள் என்பது உள்பட 29 வகையான விவரங்கள் கேட்கப்பட்டன. கணக்கெடுப்பு நடந்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, கவர்னர் மாளிகையில் இருந்து தொடங்கியது. கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்று கணக்கெடுப்பு நடத்தினர். பின்னர் மேயர் மா.சுப்பிரமணியன் வீட்டிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.



    இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. 21 நாட்களில் இப்பணி முடிக்கப்படும். அதன் பிறகு காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்பட மாட்டாது. கணக்கெடுப்பாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் மட்டுமே தகவல்களை கொடுக்க வேண்டும். கணக்கெடுப்பாளர்கள் வரும்போது விவரம் தெரிந்த ஒருவர் மட்டும் வீட்டில் இருந்து தகவல் தெரிவித்தால் போதும்.சேகரிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும்.



    இதனால், தயக்கம் இல்லாமல் அனைத்து விவரங்களையும் தெரிவிக்கலாம். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அரசின் பல்வேறு முடிவுகள் எடுக்க காரணமாக அமையும். எனவே, கணக்கெடுப்பு பணிக்கு வரும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைப்பு கொடுக்க மறுப்போர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது, வழக்கு பதிவு செய்யப்படுவோருக்கு 3 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ விதிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    காணொளிகள்: மாநாடுகள் - போராட்டங்கள்

  • போராளி

  • மாமல்லபுரம் வன்னியர் சங்க மாநாடு

    மாவீரன் ஜெ.குரு










    மாவீரன் ஜெ.குரு பகுதி 1







    மாவீரன் ஜெ.குரு பகுதி 2







    மாவீரன் ஜெ.குரு பகுதி 3





    மாவீரன் ஜெ.குரு பகுதி 4

    புதன், 1 டிசம்பர், 2010

    பா.ம.க எம்.எல்.ஏ க்களின் விபரங்கள்

  • புதன், 1 டிசம்பர், 2010
  • போராளி
  • 01.    திருப்போருர் து.மூர்த்தி ,காஞ்சிபுரம்  மாவட்டம்

    02.    செங்கல்பட்டு ஆறுமுகம் .க காஞ்சிபுரம் மாவட்டம்

    03.    காஞ்சிபுரம் ப. கமலாம்பாள் காஞ்சிபுரம் மாவட்டம்

    04 .   ஆற்காடு கே.எல். இளவழகன் வேலூர் மாவட்டம்


    05.    திருப்பத்தூர் டி.கே. ராஜா வேலூர் மாவட்டம்


    06.   பெரணமல்லூர் ஜி. எதிரொலி மணியன் திருவண்ணாமலை மாவட்டம்


    07.   மேல்மலையனூர் செந்தமிழ்ச்செல்வன் . ப  விழுப்புரம்

    08.   முகையூர் கலிவரதன் வி.எ.டி விழுப்புரம்


    09.   பண்ருட்டி டி. வேல்முருகன் கடலூர்


    10.  காவேரிப்பட்டிணம் மேகநாதன் . T.A  கிருஷ்ணகிரி


    11.   தர்மபுரி வேலுச்சாமி. L தர்மபுரி


    12.  மேட்டூர் ஜி.கே. மணி சேலம்


    13.  தாரமங்கலம் கண்ணன்.B சேலம்


    14.   ஓமலூர் தமிழரசு. A சேலம்


    15.   கபிலர்மலை டாக்டர் .கே. நெடுஞ்செழியன் நாமக்கல்


    16.  எடப்பாடி காவேரி. V. சேலம்


    17.   பவானி கே.வி.ராமனாதன் ஈரோடு


    18.   பூம்புகார் பெரியசாமி.ம நாகப்பட்டினம்

    புகையிலை பொருட்களுக்கு எதிர்ப்பு - டாக்டர் அன்புமணிராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்து

  • போராளி
  • முதலமைச்சர் கருணாநிதியுடன் பாமக தலைவர் ஜி.கே.மணி சந்திப்பு

  • போராளி

  • ஞாயிறு, 28 நவம்பர், 2010

    மருத்துவர் அய்யா போற்றுதலுக்குரிய பொது அடையாளம் - கவிஞர் ஜெயபாஸ்கரன்

  • ஞாயிறு, 28 நவம்பர், 2010
  • போராளி
  • போற்றுதலுக்குரிய பொது அடையாளம்


    அருமைத் தோழர்களே! அருந்தமிழ்ச் சொந்தங்களே!


    சமூக முன்னேற்றச் சங்கம் சங்கமிக்கும் இவ்விழாவில்.


    உங்கள் அனைவரையும் ஒன்றாகக் காண்பதனால்


    உள்ளம் நிறைகின்றேன்: உணர்வுகளால் சிலிர்க்கின்றேன் - உங்கள்


    ஒவ்வொருவர் முகம் பார்த்தும் உளமார வணங்குகின்றேன்!






    சத்திரியச் சமுத்திரத்தில் சீறியெழும் பேரலைநான்


    பாட்டாளிகளின் படைகளுக்குப் பாட்டிசைக்கும் பாவலன் நான்


    ஏத்தப் பாட்டுக்கெல்லாம் எதிர்ப்பாட்டு பாடிக்கொண்டு


    ஏரிக்கரைகளின் மீது இறுமாந்து நடந்தவன் நான்.






    உழைப்பாளிக் கூட்டத்தில் உதிரியாய்க் கிடந்தவன் நான்


    ஒடுக்கப்பட்டுக் கிடந்து ஓலமிட்டு அழுதவன் நான் - என்


    கருத்தறியா வயதினிலே கால்சட்டைப் போட்டுக்கொண்டு


    காட்டுப்பாக்கம் மண்ணில் கால் தேய நடந்தவன் நான்!


    மருத்துவர் அய்யா எனும் மாபெரும் இடிமுழக்கம்


    மஞ்சள் மேகம்போல் மேடையிலே ஏறுகையில்


    உத்திரமேருரையே உலுக்கி எடுப்பது போல்






    அய்யா அய்யா என்று ஆர்ப்பரிக்கும் கூட்டத்தில்


    யார் அந்த அய்யா? என்று எட்டி எட்டிப் பார்த்தவன் நான்!


    அய்யாவின் கால்பட்ட அத்தனைக் கிராமங்களும்


    ஆர்ப்பரித்து அணிதிரண்ட அதிசயத்தை நான் பார்த்தேன்!


    வெந்ததைத் தின்றுவிட்டு விதிவந்தால் சாவோம் என்ற


    வன்னியச் சமூகத்தை விழிக்கவைத்த வெடிமுழக்கம்!






    உத்திரமேரூர் மண்ணில் உருவான நாள் முதலே


    மருத்துவர் அய்யாவை மனதிலே ஏந்திக் கொண்டேன்! -இன்று


    தமிழினப் போராளியின் போர்ப்படையில் ஒருவன் நான் - உங்கள்


    தமிழ்க்குடிதாங்கியின் தடம் பற்றி நடப்பவன் நான்!


    திருப்புகழைப் பாடினால் வாய் மணக்கும் என்றாலும் - எங்கள்


    தைலாபுரத்தைப் பாடினால்தான் தமிழ் மணக்கும் என்பவன் நான்!






    தமிழினத்தின் துயர்துடைக்கும் காற்றைப் பாடாமல்


    தமிழ் மண்ணை உயிர்ப்பிக்கும் ஆற்றைப் பாடாமல்


    தமிழ்மொழிக்கு நீர்சுரக்கும் ஊற்றைப் பாடாமல்


    தமிழ்ப் பகையைச் சுட்டெரிக்கும் தீயைப் பாடாமல்,


    ஒற்றை வரியிலே உரத்துச் சொல்வதெனில் - எங்கள்


    தைலாபுரத்துத் தந்தை பெரியாரைப் பாடாமல்


    என்பகல் முடிந்ததில்லை: என் இரவு விடிந்ததில்லை!


    எதனால் இப்படி நீ எப்போது பார்த்தாலும்,


    திண்டிவனத்தையே அண்டிக் கிடக்கின்றாய்?


    எல்லோருக்கும் பொதுவான உயர்தமிழ்க் கவிஞர் நீ


    எவரோ ஒரு தலைவரை எப்போதும் புகழலாமா?






    அணி மாறி அரசியலில் ஆதாயம் பார்ப்பவரை,


    கூட்டணி தர்மத்தையே குண்டு வைத்துத் தகர்பவரை


    அணியிலே சேர்ந்த பின்பு அடங்கிப் போகாதவரை,


    அரசியல் வணிகராக ஆகிவிட்ட ஒருவரை,


    அய்யா அய்யா என்று அவர் பினனால் போகிறீரே


    தைலாபுரத்துக்கு அப்பால் தலைவர்களே கிடையாதா?


    திண்டிவனம் இல்லாமல் தமிழ்நாடு விடியாதா?


    என்றெல்லாம் ஒருவர் எனைப் பார்த்துக் கேள்வி கேட்டார்.


    யாரப்பாநீ என்று நான் அவரைக் கேட்டேன்.






    வாணியம்பாடியில் இருந்து வந்திருக்கும் முருகன் நான்


    வாழ்வாங்கு நான் வாழ வகை செய்த கட்சியிலே


    வண்டு முருகனைப் போல் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.


    நீட்டி முழக்கி நான் நுரைபொங்கப் பேசுவதால்


    நுரைமுருகன் என்கிற நல்ல பெயர் எனக்குண்டு!


    என்று சொன்னவரை ஏறிட்டு நான் பார்த்தேன்!


    வாருங்கள் முருகா வாய்கிழிந்த நுரைமுருகா - அரசியலில்


    வாழத் தெரியாமல் வண்டுமுருகன் ஆனவரே


    குதர்க்கமாய் எனைப் பார்த்துக் கேள்விகளா கேட்கின்றாய்?






    தைலாபுரத்துக்கப்பால் தலைவர்களே இல்லையா?


    என்றா எனைப் பார்த்து ஏதோவொரு கேள்வி கேட்டாய்!


    தைலாபுரத்துக்கப்பால் ‘தலைகள்’ இருக்கிறது ‘தலைவர்கள்’ இல்லை


    தமிழ்நாடு முழுவதும் ‘கட்சிகள்’ இருக்கிறது’இயக்கங்கள்’ இல்லை!


    தடிகள் ஒவ்வொன்றிற்கும் ‘கொடிகள்’ இருக்கிறது’கொள்கைகள்’ இல்லை


    பேச வேண்டியதைப் பேசுவோர் இல்லை!


    போராட வேண்டியவை நிறைய இருக்கின்றது


    போராடித் தீர்வுகாணப் போராளிகள் இல்லை? - இப்படி





    இருக்கக் கூடாத யாவும் இருக்கின்ற காரணத்தால்


    இருக்க வேண்டிய எதுவும் இல்லாத காரணத்தால்


    ஈரோட்டுப் பெரியாரின் எண்ணக் குமுறல்களை


    ஈடேற்ற வந்த எங்களது போராளி


    மருத்துவர் அய்யாவே மாபெரும் இனமுழக்கம்!





    அரசியல் கூட்டணியில் அடிக்கடி அணியை மாற்றி - அவர்


    ஆதாயம் காண்பதாக அலறுகின்ற அற்பமே





    அணிமாறும் நிலை எடுக்கும் எங்கள் அய்யா என்றேனும்


    கொள்கை மாரியதாய்க் கூறமுடியுமா உன்னால்?


    மருத்துவர் அய்யாவின் மகத்தான தலைமை ஏற்று


    மாபெரும் மக்கள் கூட்டம் மடைதிறந்து பின் தொடர - அதை


    வழிநடத்திக் கொண்டு சென்று வாழ்வுரிமை பெறுகின்ற


    போராட்ட நெடும்பயனை நுட்பங்களே அணிமாற்றம்.


    நுரைமுருகனுக்கெல்லாம் இந்த நுட்பங்கள் தெரியாது!




    ஆற்று மணலையெல்லாம் அள்ளிக் கொண்டு போங்கள் என்று


    அணி மாறிய எங்கள் அய்யா அறிக்கைகள் விட்டாரா?


    கல்விக்கட்டணத்தில் இனிமேல் கொள்ளையடிக்கலாம் என்று


    கூட்டணி மாறியதால் கூட்டத்தில் பேசினாரா?





    இடஒதுக்கீடு உரிமை எங்களுக்கு வேண்டாம் என்று


    எந்தக் கூட்டணியில் சேர்ந்து எங்கள் அய்யா உனக்கு சொன்னார்.


    வாழமுடியாமல் சாகும் வேளான்குடி மக்களின்


    வாழ்வுரிமைகளுக்கு இனிமேல் வாய்திறக்க மாட்டேன் என்று


    அணிமாறிய எங்கள் அய்யா அறிவிப்பு செய்தாரா?





    ஏழை உழவர்களுக்கு இருக்கின்ற விளைநிலத்தை


    வளைத்து வளைத்து இனிமேல் வாங்கிப் போடுங்கள் என்று


    நீ செய்யும் இரண்டகத்தை எங்கள் அய்யா செய்கின்றாரா?


    அணிமாறிய உடனே ஆட்களை கூட்டிக் கொண்டு


    வீட்டையெல்லாம் இடித்து விமானத்தை இறக்குவதற்கு


    புல்டோசரை ஓட்டிக்கொண்டு போனாரா எங்கள் அய்யா?


    குடிமக்களே தமிழ்க் குடிமக்களே நீங்கள்


    குடித்துக் குடித்துக் குட்டி சுவராய் போங்களென்று


    கூட்டணிக் கட்சியின் கொள்கையைக் கூறினாரா எங்கள் அய்யா?





    ஆளும் கூட்டணியில் அணிசேர்ந்த காரணத்தால்


    அரசே.... அரசே ஆளுகின்ற தமிழரசே


    சாராய உற்பத்தி சுணங்கிப் போய்க் கிடக்கிறது


    ஆலைகளை திறந்து அழகழகா மது வடித்து


    அனைவருக்கும் கொடு என்று ஆர்ப்பாட்டம் செய்தாரா?





    முதல்வர் குடும்பத்தின் முத்தான காவியம்


    எந்திரன் வெளிவந்து இத்தனை நாள் ஆகிறதே


    இளைஞர்களே நீங்கள் அதை இன்னுமா பார்க்கவில்லை?


    என்று எங்களையெல்லாம் இருட்டிலே தள்ளினாரா?





    அணிமாறிப் போய்விட்ட அவசியத்தின் பொருட்டு


    ஆற்காட்ட்சு சாமிகள் ஆனந்தப்படும் படியாய்


    தமிழ் ஓசை நாளேட்டைத் தெலுங்கிலே நடத்தினாரா?





    அணிமாறி விட்டதனால் அறம் மாறிச் செயல்பட்டு


    மக்கள் தொலைக்காட்சியிலே மானாட விட்டாரா?


    மயிலாடப் பார்த்தாரா? - இல்லை


    குதர்க்கப் பொருள் கொண்ட குத்துப் பாட்டுக்கெல்லாம்


    குழந்தைகளைக் கூட கூத்தாட விட்டாரா?





    உன்னோடு கூட்டணியில் ஒன்றாய் இருந்த போதே


    ஊருக்கு உலைவைக்கும் உங்களதுத் திட்டங்களை


    உடனுகுடன் தகர்த்த வீரியம் எங்கள் அய்யா!





    தேவையைக் கருதிச் சேரும் தேர்தல் உடன்பாட்டில்


    அடங்கிப் போவார் என்று அய்யாவை நினைக்காதே!


    அடக்கப் பிறந்த அவர் அடங்கிப் போக மாட்டார்!





    கட்சி அரசியல் கலாச்சாரக் கூட்டத்தில்


    கொள்கை அரசியலின் கோட்பாடு எங்கள் அய்யா!





    கோடானுகோடுப் பாட்டாளிச் சொந்தங்களின்


    நாடி நரம்புகளில் நீக்கமற நிறைத்து நின்று


    சமூகநீதி கேட்ட்கும் சஞ்சீவிராயர் மகன்!





    ஒரே ஒரு மனிதராய்ப் பயணத்தைத் தொடங்கி


    இரண்டு கோடித் தமிழர்களின் இயக்கமாய் மாறியவர்!


    அரசியலுக்கு அப்பால் அனைத்துத் தமிழர்களுக்கும்


    பெரியாருக்குப் பிறகுவந்த பெரியார் இவர் என்கிறார்கள்!




    அய்யா என்கின்ற மையப்புள்ளியே- நம்


    அனைவருக்குமான அடையாளமானது!


    இரண்டு கோடி மக்கள் இருக்கின்ற சொந்தத்தில்


    அய்யாவுக்கு முன்பென்ற அடையாளம் எவருமில்லை!


    போற்றுதலுக்குரிய பொது அடையாளம்


    இனமிருக்கும் வரைக்கு இருக்கப் போகும் அடையாளம்!





    அய்யா சிந்திய வியர்வைத் துளிகளே


    ஆயிரக்கணக்கிலே சங்கமாய்த் திரண்டது!


    அய்யா என்கிற ஒற்றை நரம்புதான்


    உதிரிமணிகளை ஒன்றாக கோத்தது!.





    ஆசுவாசப் படுத்தியே அழிக்கின்ற அரசியலில் - நம்மை


    ஆவேசம் பெற செய்த அருமைப் பெருந்தலைவர்!


    அனைத்துச் சமூகங்களும் அதனதன் உரிமைப் பெற


    அடித்தளமாய்ச் சிந்திக்கும் அரசியல் விஞ்ஞானி!





    ஓட்டுக்கு துட்டு தரும் உங்களது அரசியலில்


    வேட்டுக்கு உயிர்கொடுத்து வரலாற்றைத் தொடங்கியவர்!


    பட்டாசு ஓசைக்குப் பழக்கப்பட்ட தலைவர்களைத்


    துப்பாக்கி ஓசையால் திரும்பிப் பார்க்க வைத்தார்!





    இரண்டகம் ஏளனம் எல்லாம்


    எங்களைக் கடந்து போகும்!


    எல்லாமும் இழந்து நிற்கும் எங்களது ஏழையினம்


    யாவும் பெறுகின்ற இனியநாள் நாளை வரும்!


    நாளை நமதாகும் நல்லதோர் விடியல் வரும் - எங்கள்


    நவநீதம்மாள் பேரன் நாடாளும் காலம் வரும்!



    அன்புடன்,
    கவிஞர் ஜெயபாஸ்கரன்














     (குறிப்பு : -10-10- 2010  அன்று சென்னை பாடியில் நடைபெற்ற சமுக முன்னேற்ற சங்க விழாவில் கவிஞர் ஜெயபாஸ்கரன் வாசித்த கவிதை)





    வெள்ளி, 26 நவம்பர், 2010

    பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை - பாமகவினருக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

  • வெள்ளி, 26 நவம்பர், 2010
  • போராளி
  • 
    டாக்டர் அன்புமணி ராமதாஸ்
    
    பாமகவில் பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் எச்சரித்தார். வேலூர் ஒருங்கிணைந்த கிழக்கு மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டம் ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இதில், பாமக மாநில இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் பேசியது: அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாடுபடும் கட்சி பாமக. பொதுத் தேர்தல் வர உள்ள நிலையில், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உயர்ந்த பொறுப்புகள் வழங்கப்படும். கட்சிக்காக அன்று உழைத்தவர்கள் இன்று அமைதியாக கிராமங்களில் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களை அழைத்து தலைமை வகிக்கச் செய்து நிகழ்ச்சிகளை நடத்துங்கள். பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    பென்னாகரம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் நாம் தோற்கடிக்கப்பட்டோம். இது ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்ட தேர்தல். நாம் பணம் தராமல் இரண்டாவது இடம் பெற்றோம். இனி பென்னாகரம் தேர்தல் பார்முலாவை பயன்படுத்த உள்ளோம். விஞ்ஞான ரீதியில் அரசியல் நடத்த உள்ளோம். இளைஞர்களை ஊக்குவிக்க உள்ளோம்.

    வாலாஜா ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று சென்றதால் ரயில்வே துறைக்கு ரூ.5 கோடி வரை லாபம் கிடைத்தது. தற்போது எந்த ரயிலும் நிற்பதில்லையாம். இதுகுறித்து 4 முறை மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். தன்னால் முடியாது என்று அமைச்சர் சொல்லட்டும். நான் நிறுத்திக் காட்டுக்கிறேன்.

    பாமக 7 இடங்களில் தோற்றதும் அழிந்து விட்டது, ஒழிந்து விட்டது என்று பலர் கூறினர். பாமகவை யாராலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது. பாமக இல்லாமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள இடஒதுக்கீடு போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால் தலைவர் ராமதாஸ் ஒப்புதலோடு சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    கூட்டணி பற்றி யாரும் கவலைகொள்ளத் தேவையில்லை. தலைவர் ராமதாஸ் பார்த்துக் கொள்வார். பாமக இல்லாமல் ஆட்சிக்கு யாரும் வரமுடியாது என்பதை உணர்த்த வேண்டும் என்றார் அவர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு: பாமக புத்துணர்வு பெற்று செயல்பட்டு வருகிறது. எதிர்கட்சிகளை எதிர்கொள்ளத் தயாராகி உள்ளது. 52 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக பாமக விளங்குகிறது. இளைஞர் பட்டாளம் அதிகம் உள்ள ஒரே கட்சி பாமகதான் என்றார் அவர்.

    பாமக தலைவர் கோ.க.மணி: நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் பாமகதான் வெற்றி பெறும். தமிழகத்தில் சுகாதாரத்துறை தன்னிறைவு பெற பாடுபட்டவர் அன்புமணி. தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சி அமையும். சட்டப் பேரவைத் தேர்தல் வர உள்ளது. அதற்குள்ளாக கிராமக் கிளைகளை வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

    கூட்டத்துக்கு ஆர்க்காடு எம்.எல்.ஏ. கே.எஸ்.இளவழகன் தலைமை வகித்தார். இதேபோல, திருப்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜி.பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வியாழன், 25 நவம்பர், 2010

    எதிர்ப்போரின் கவனத்திற்கு - ஜெ.குரு. தலைவர் வன்னியர் சங்கம்

  • வியாழன், 25 நவம்பர், 2010
  • போராளி


  • வன்னிய சிற்றரசர்கள் - நூல் வெளியீட்டு விழா

  • போராளி
  • 
    
    
    
    புலவர் முத்து எத்திராசன் அவர்களின் வன்னிய சிற்றரசர்கள் என்ற நூலை மருத்துவர் சின்ன அய்யா வெளியிட்டார்கள்
       

    மக்கள்காவலர் மருத்துவர் அய்யா | makkal kavalar maruthuvar ayya